பன்னீர் சுற்றுப்பயணம் இன்று தொடங்கிய நிலையில், இதற்கான ஆலோசனை இன்று காலை பன்னீரின் வீனஸ் இல்லத்தில் நடைபெற்றதாம். இதில் முனுசாமி, பிரபாகர், செம்மலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசப்பட்ட விசயங்கள் குறித்து இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சசிகலாவை தாக்கி மட்டும் பேசினால் போதாது, அம்மா மரணத்தில் உள்ள மர்மம் பற்றி பேச வேண்டும் என பன்னீர் கேட்டுக் கொண்டாராம்.

சசிகலா தங்களுக்கு கொடுத்த தொல்லைகளை மூத்த நிர்வாகிகள் மக்களுக்கு விளக்க வேண்டும் என்றாராம். இந்த  கூட்டங்களுக்கு ஆகும் செலவை கட்சி நிர்வாகிகள் தலையில் கட்ட வேண்டாம் என்றும் நாமே பார்த்துக் கொள்ளலாம் என்றாராம் பன்னீர். இப்போதே அவர்களை செலவு செய்யச் சொன்னால் நம்மீது நிர்வாகிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டு விடும் என்றாராம்.

அவர் தனது சொந்த பணத்தை செலவு செய்வாரா, அல்லது யாரும் நிதியுதவி செய்வார்களா என்பது போன்ற தகவல்கள் இல்லை.