புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

மீனா ராஜியிடம் சரணம் அடைந்து கெஞ்சும் பாண்டியனின் சம்மந்தி.. தியாகியாக மாறி கோமதியை ஏமாற்றும் மருமகள்கள்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பணம் வசதி இல்லை என்றாலும் ஓவராக அலட்டல் பண்ணாமல் இருந்திருந்தால் பாக்கியம் மற்றும் தங்கமயிலின் மீது பெரிதாக கடுப்பாகி இருக்காது. ஆனால் தொடர்ந்து பொய்யும் பித்தலாட்டமும் பண்ணி பாண்டியன் குடும்பத்தில் ஏழரைக் கூட்டும் விதமாக பாக்கியத்தின் பேச்சைக் கேட்டு தங்கமயில் கொஞ்ச நாள் ஓவராக ஆடினார்.

ஆனால் போகப் போகத் செய்த தவறுகள் எல்லாம் வெளிவந்து விடுமோ என்ற குற்ற உணர்ச்சியில் தங்கமயில் அப்படியே அடங்கி போய்விட்டார். அந்த வகையில் இப்பொழுது நடக்கிற தாலி பெருக்கு பங்க்ஷனில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதிலும் பதட்டத்துடனே இருக்கிறார். ஆனால் இவருடைய பதட்டம் எங்கே காட்டிக் கொடுத்து விடுமோ என்ற நினைப்பில் தங்கமயில் அம்மா பாக்கியம் ரிலாக்ஸாக இருப்பது போல் அனைவரிடமும் பேச்சு கொடுத்து மயக்கி விடுகிறார்.

அப்படித்தான் ராஜி நகையை அவருடைய அம்மா திருப்பி வாங்கி விட்டார். அதனால் தங்கமயிலின் நகையை கொஞ்சம் போட்டு விடுங்கள் என்று சந்தேகம் வராதபடி ஒரு ட்ராமாவை பண்ணிவிட்டார். ஆனால் கோமதி அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார். இதைப் பார்த்த தங்கமயில் மொட்டை மாடிக்கு கூட்டிட்டு போயி 8 சவரன் தவிர மற்ற நகை எல்லாம் கவரிங் நகை.

இப்படி இருக்கும் பொழுது என்ன தைரியத்தில் நீ ராஜிக்கு நகை கொடுக்க சொன்னாய் என்று கேட்கிறார். இது எல்லாம் ராஜி மற்றும் மீனா கேட்டுக் கொண்டார்கள். என்ன பேசினீங்க என்று தங்கமயில் இடம் கேட்கும் பொழுது பாக்கியம் ஏதோ சொல்லி சமாளிப்பது போல் பேசினார். அத்துடன் தங்கமயில் அப்பாவும் எதுவும் நடக்காத போல் மீனா மற்றும் ராஜியை டைவர்ட் பண்ணி பேசினார்.

ஆனாலும் நம் மாட்டிக்கிட்டோம் பங்கு என்பதற்கு ஏற்ப தங்கமயில் உணர்ந்து விட்டார். அந்த வகையில் ராஜி மற்றும் மீனாவிடம் மறைக்காமல் எல்லா உண்மையும் போட்டு உடைக்கிறார். எங்களிடம் பணம் வசதி கிடையாது, வெறும் எட்டு சவரன் மட்டும்தான் தங்கம். மற்றது எல்லாம் கவரிங் நகை தான் என்ற விஷயத்தை சொல்லிவிட்டார். இதைக் கேட்டு மீனா மற்றும் ராஜி வாய் அடைத்து போய் அதிர்ச்சியாகி விட்டார்கள்.

ஆனாலும் தன் மகளின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மீனா ராஜி இடம் மொத்தமாக சரணடைந்து இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று பாக்கியம் கெஞ்சுகிறார். ஆரம்பத்தில் மீனா ராஜி இது பெரிய விஷயம், இதை நாங்கள் மறைக்க முடியாது. மறைத்தால் தேவை இல்லாமல் பிரச்சினையாகும் என்று சொல்கிறார்கள்.

ஆனாலும் பாக்கியம் மற்றும் தங்கமயிலின் கண்ணீரை பார்த்து ராஜி மற்றும் மீனா தியாகியாக மாறும் அளவிற்கு இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லாமல் மறைக்கப் போகிறார்கள். ஒற்றுமையாக இருக்கும் கோமதி இடமும் இந்த விஷயத்தை சொல்லாமல் தங்கமயிலை காப்பாற்றப் போகிறார்கள். ஆனால் ஒரு நேரத்தில் இந்த விஷயம் வெளி வந்தால் இதில் மாட்டிக் கொள்வது மீனாவும் ராஜியும் தான்.

அதனால் இந்த விஷயத்தை அட்லீஸ்ட் கோமதியிடம் சொல்லவாது செய்யணும். ஆனால் இந்த தியாகிகள் அதையும் பண்ண மாட்டார்கள். இதற்குப் அடுத்த ஆவது இவர்களின் நல்ல மனசை புரிந்து கொண்டு தங்கமயில் இவர்களுடன் கூட்டணி வைத்து சப்போர்ட் செய்து வந்தால் ஓரளவு பார்க்க சுவாரசியமாக இருக்கும்.

- Advertisement -

Trending News