Home Tamil Movie News ராஜி மீனாவை பற்றி தெரியாமல் பயப்படும் பாண்டியனின் வாரிசுகள்.. முத்துவேலுவின் பாசத்தை கெடுக்கும் தம்பி

ராஜி மீனாவை பற்றி தெரியாமல் பயப்படும் பாண்டியனின் வாரிசுகள்.. முத்துவேலுவின் பாசத்தை கெடுக்கும் தம்பி

pandian stores 2
pandian stores 2

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி மற்றும் மீனாவை குமரவேலு கடத்திருக்கிறார் என்று பாண்டியன் குடும்பத்திற்கு தெரிந்து விட்டது. அத்துடன் குமரவேலுவை அசிங்கப்படுத்தி பொண்ணு பார்க்க வந்த குடும்பம் வேண்டாம் என்று திரும்பிப் போய் விட்டார்கள். இதனால் மறுபடியும் குமரவேலு மூலமாக ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்ற பயத்தில் செந்தில் மற்றும் கதிர் இருக்கிறார்கள்.

அந்த வகையில் காலேஜுக்கு போவதற்கு ராஜி பஸ் ஸ்டாண்டில் காத்துக் கொண்டிருக்கும் பொழுது கதிர் சைக்கிளில் வந்து நின்று கொண்டிருக்கிறார். இதை பார்த்த ராஜி தோழிகள் ராஜியை கிண்டலடித்து பேசுகிறார்கள். உடனே ராஜி, கதிரிடம் நீ ஏன் போகாமல் இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு கதிர் சும்மாதான் இருக்கிறேன் உனக்கு என்ன பிரச்சனை என்று பேசிய நிலையில் உங்க அண்ணனால் ஏதாவது ஆபத்து வந்து விடக்கூடாது என்பதற்காக நிற்கிறேன் என்று சொல்கிறார்.

ராஜியின் அப்பாவிடம் வன்மத்தை காக்கும் சக்திவேல்

உடனே ராஜி, என்னை கடத்தி வைத்த போதே நான் தைரியமாக அவனிடம் இருந்து தப்பித்து வந்தேன். என்ன எல்லாம் யாரும் ஒன்னும் பண்ண முடியாது. நீ அதனால் பயப்படாமல் காலேஜுக்கு போ என்று சொல்கிறார். ஆனால் கதிர் எதையும் கேட்காமல் நான் இங்கு தான் இருப்பேன் பஸ் வரும் வரை. நீ காலேஜுக்கு கிளம்பியதும் நான் உன் கூடவே பின்னாடி வருவேன் என்று பாதுகாப்பாக நிற்கிறார்.

அதே மாதிரி மீனா ஆபீஸ் நேரம் முடிவதற்கு முன் செந்தில் ஆபீஸ் வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து மீனா, ஏன் இங்கே நிற்கிறாய் என்று கேட்கும் பொழுது ராஜி அண்ணனால் உனக்கு ஏதாவது பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காக நிற்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு மீனா நீ பயப்படுற மாதிரி எல்லாம் ஒன்னும் நடக்காது.

தேவையில்லாமல் என்ன யோசித்து உன் நேரத்தை வீணடிக்காத. நீ வந்திருப்பது தெரிந்தால் மாமா அதுக்கும் சேர்த்து திட்ட போறாங்க என்று சொல்லி இரண்டு பேரும் வீட்டிற்கு சேர்த்து கிளம்பி விடுகிறார்கள். இதனை தொடர்ந்து கோமதி, அண்ணன் பையன் செய்த காரியத்தை நினைத்து புலம்பித் தவித்துக் கோபப்பட்டு பேசுகிறார். அப்பொழுது மீனா அவங்க எங்கள கடத்துவதற்கு பிளான் பண்ணவில்லை.

தங்கமயிலை கடத்துவதற்கான பிளான் பண்ணி இருந்தார்கள். ஆனால் அன்னைக்கு அந்த ரூமில் நான்கு இரண்டு பேரும் தங்கி இருந்ததால் மணப்பெண் யாரு என்று தெரியாததால் எங்க இரண்டு பேரையும் தூக்கிட்டு போய் விட்டார்கள் என்று சொல்கிறார்கள். இதைக் கேட்டதும் தங்கமயில் அப்படி என்றால் என்னை கடத்து இருப்பார்களா என்று பயப்பட்டு பேசுகிறார்.

உடனே கோமதி, அவங்கள கடத்திட்டு போயிட்டாங்க என்று தெரிந்து நீ இந்த அளவுக்கு கூட பதறல. இப்போ உனக்கான ப்ளான் என்று தெரிந்ததும் நீ பயப்படுகிறாயா என்று கேட்கிறார். இதற்கிடையில் குமரவேலு செய்த காரியத்தால் ராஜியின் அப்பா முத்துவேலு கோபத்தில் குமரவேலுவை அடித்து விடுகிறார். இதை பார்த்ததும் கோபப்பட்ட சக்திவேல் அண்ணன் என்று கூட பாராமல் உன் ஓடிப்போன பொண்ணு உனக்கு ரொம்ப முக்கியமா தெரியுதா என்று வாய்க்கு வந்தபடி சண்டை போடுகிறார்.

இதற்கு முத்துவேல் எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு இருக்கிறாய். இதனை தொடர்ந்து பாண்டியனின் ஐம்பதாவது பிறந்தநாளை சர்ப்ரைஸ் ஆக கொண்டாடும் விதமாக ஓட்டு மொத்த குடும்பமும் கேக் வாங்கி சந்தோசமாக கொண்டாடப் போகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்