புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ராஜி பேச்சைக் கேட்டு மெய்மறந்து போன பாண்டியனின் குடும்பம்.. தங்கமயில் இடம் ஓவர் கரிசனம் காட்டும் சரவணன்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், எந்த ஒரு விஷயத்தையும் தைரியத்துடன் டீல் பண்ணினால் அதில் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஏற்ப ராஜி எடுத்து வைத்த காரியம் வெற்றிகரமாக முடிந்து விட்டது. அதாவது ராஜி பொறுத்தவரை தனக்காக செலவை தானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணம்.

அதனால் டியூஷன் எடுக்க வேண்டும் என்று முடிவு பண்ணி இருந்தார். ஆனால் இதற்கு பாண்டியன் சம்மதம் கொடுக்காத நிலையில் தெரியாமல் டியூஷன் எடுத்தார். பிறகு இந்த விஷயம் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் தெரிஞ்ச உடன் பாண்டியன் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து இந்த பிரச்சனை பூகம்பமாக வெடித்து விட்டது.

இருந்தாலும் டியூஷன் எடுத்தே தீர்வேன் என்று பிடிவாதமாக இருக்கும் ராஜி, கோமதி மூலம் பாண்டியனிடம் சம்மதத்தை வாங்க முயற்சி எடுத்தார். ஆனால் கோமதி அவருடைய பயந்த சுபாவத்தினால் பாண்டியனிடம் பேச மறுத்துவிட்டார். அதனால் பொருத்தது போதும் என்று பொங்கி எழுந்த ராஜி, குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக இருக்கும் பொழுது பாண்டியனிடம் நேரடியாக கேட்டுவிட்டார்.

பொண்ணுங்க வீட்டில படிச்சு முடிச்சு சும்மா இருக்கணும் என்று நினைக்கக்கூடிய ஆள் நீங்க கிடையாது. எனக்கு தெரியும் நான் டியூஷன் எடுத்து சம்பாதித்தால் உங்களுக்கு தானே பெருமை மாமா. நீங்க ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்பொழுது அத்தை உங்களுக்கு உதவ வேண்டும் என்று நினைப்பது சகஜம் தானே. அதே மாதிரி தான் கதிர் கஷ்டப்படும் போது நான் உதவி பண்ண வேண்டும் என்று நினைப்பது தவறா?

ஏன் எனக்கு மட்டும் டியூஷன் எடுப்பதற்கு சம்மதம் கொடுக்காமல் கஷ்டப்படுத்துறீங்க? தயவுசெய்து எனக்கு டியூஷன் எடுப்பதற்கு அனுமதி கொடுங்கள் என்று கராராக பேசி விட்டார். இப்படி ராஜி பாயிண்ட் பாயிண்டாக பேசி பாண்டியன் வாய் திறக்காத அளவிற்கு பேசி விட்டார். அத்துடன் ஒட்டுமொத்த குடும்பமும் ராஜியின் பேச்சை கேட்டு மெய்மறந்து போய்விட்டார்கள்.

அந்த அளவிற்கு ராஜி சரியாக பேசி பாண்டியன் மனசை மாற்றி விட்டார். பாண்டியனும், ராஜி சொன்னதை பற்றி யோசித்த நிலையில் டியூஷன் எடுப்பதற்கு சம்மதித்து விட்டார். இதற்கு இடையில் ராஜி பேசிய பேச்சுக்கு கதிர் சப்போர்ட் பண்ணி கைகொடுத்து வாழ்த்தி விட்டார். அதை மாதிரி தங்கமயில், கோமதி மற்றும் மீனா அனைவரும் ராஜிக்கு சப்போர்ட் பண்ணி விட்டார்கள்.

இதை தொடர்ந்து அப்பாவுக்கு ஒரு கஷ்டம் என்றதும் தங்கமயில் உதவி செய்ததை நினைத்து சரவணன், தங்கமயிலிடம் உருகி உருகி பேசுகிறார். அதனால் ஓவராக பாசத்தை கொட்டும் விதமாக கரிசனம் காட்டி பேசி உன் கையால் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு எனக்கு மதியம் சாப்பாடு எடுத்துட்டு வரியா என்று சொல்லிட்டு கிளம்பி விட்டார். ஆனாலும் இந்த சரவணன் கேரக்டரை புரிந்து கொள்ள முடியவில்லை என்று தங்கமயில் முழித்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

Trending News