சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

முப்பெரும் தேவிகளாக மாறிய பாண்டியனின் மருமகள்கள்.. தங்கமயிலின் மனசை மாற்றப் போகும் மீனா ராஜி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் எதற்காக யாருக்காக பணத்தை திருடினார் என்கிற விஷயம் தற்போது பாண்டியனுக்கு தெரிந்து விட்டது. தம்பிக்கு தன்னால் ஒரு பிரச்சனை என்று தெரிந்ததும் குற்ற உணர்ச்சியால் தவித்து வந்த சரவணன் அப்பாவிடம் எல்லா உண்மையும் சொல்லும் விதமாக தங்கமயில் செய்த தவறை சொல்லி எங்களுடைய சந்தோசத்திற்காக கதிர் பணத்தை எடுத்தார் என்பதையும் சொல்லி விடுகிறார்.

அந்த வகையில் இந்த ஒரு விஷயத்தில் தவறு முழுவதும் தங்கமயில் மீது தான் இருக்கிறது என்பது பாண்டியனுக்கு தெரிந்து விட்டது. ஆனாலும் கதிர் மீது கோபப்பட்டு பிரச்சினை பண்ணிய பாண்டியன், தற்போது தங்கமயில் இடம் கோபப்படாமல் பொறுமையாக எடுத்துச் சொல்லும் விதமாக அட்வைஸ் பண்ணி விட்டு அந்த பிரச்சினையை முடித்துவிட்டு போய்விடுகிறார்.

தங்கமயில் மீது பாசத்தை கொட்டும் மீனா ராஜி

இதனால் கதிரும் பாண்டியன் கோபத்தில் இருந்து தப்பித்து விட்டார் என்பதற்கு ஏற்ப இந்த பிரச்சினை தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் இதற்கெல்லாம் ஏன் கதிரை பலியாடாக சிக்க வைக்கிறீர்கள் என்று கோமதி கோபப்பட்டு இனி யாருக்கு என்ன பிரச்சனை வந்தாலும் அவங்க பிரச்சனையை அவங்களே சமாளித்துக் கொள்ளும் அளவிற்கு பார்த்துக் கொள்ளுங்கள்.

கதிரை எந்த விஷயத்தில் கஷ்டப்படுத்தி தொந்தரவு படுத்த வேண்டாம் என்று கோமதி சொல்லி விடுகிறார். இதனால் தங்கமயில் மீது கோபத்தில் இருக்கும் கோமதி, மீனா மற்றும் ராஜிடம் புலம்புகிறார். அப்பொழுது கோமதியை சமாதானப்படுத்தும் விதமாக இதையே பற்றி பேசி தேவையில்லாமல் டென்ஷன் ஆக வேண்டாம். இதோடு இந்த விஷயத்தை மறந்து விடுங்கள் என்று கோமதியிடம் சொல்கிறார்கள்.

அத்துடன் தங்கமயில் அக்காவும் ரூமை விட்டு வெளியே வரவில்லை, சாப்பிடவும் வரவில்லை. வாங்க போயி என்ன என்று பார்த்து கூட்டிட்டு வருவோம் என கோமதியிடம் சொல்கிறார்கள். ஆனால் கோமதி, நான் வரவில்லை தங்கமயில் மீது ரொம்ப கோபமாக இருக்கிறேன் என்னை விடுங்கள் என்று சொல்லிவிடுகிறார்.

பிறகு மீனா மற்றும் ராஜி இருவரும் சேர்ந்து தங்கமயிலை பார்த்து பேசுவதற்கு போகிறார்கள். போனதும் தங்கமயிலை சமாதானப்படுத்தும் விதமாக அக்கறையாக பேசி சாப்பிட கூப்பிடுகிறார்கள். ஆனால் தங்கமயில் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது யாரிடமும் சொல்லாமல் அப்படியே போய் விடலாமா என்று தோன்றுகிறது என புலம்புகிறார்.

இதை கேட்டதும் மீனா மற்றும் ராஜி இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. இதை நினைத்து இந்த அளவுக்கு கஷ்டப்படவும் தேவையில்லை. இப்பொழுது சாப்பிட வாங்க என்று தங்கமயில் கையைப் பிடித்து மீனா மற்றும் ராஜி கூப்பிட்டு மூன்று பேரும் ஒற்றுமையாக இருப்பது போல் காட்டப்படுகிறது. இப்படி மீனா மற்றும் ராஜி காட்டும் பாசத்திற்கு தங்கமயில் உண்மையிலேயே இனி இந்த குடும்பத்தின் ஒற்றுமைக்காக மாறி நல்லது நினைத்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.

ஆனால் நிச்சயம் இந்த ஒரு விஷயம் தங்கமயிலின் மனசை மாற்றவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதை கெடுக்கும் விதமாக பாக்கியம் மட்டும் தலையிடாமல் இருந்தால் பாண்டியன் குடும்பம் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். ஆனால் இதில் இன்னும் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக ராஜியின் அண்ணன் குமரவேலு, அரசி கழுத்தில் தாலி கட்டி பாண்டியன் குடும்பத்தை அல்லல்படுத்த தயாராகி விட்டார்.

- Advertisement -

Trending News