பாண்டியன் மகளுக்கு ராஜி அண்ணனால் வரப்போகும் பிரச்சனை.. அம்மாவிடம் புலம்பித் தவிக்கும் மருமகள்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் என்னதான் பிளான் பண்ணினாலும் சரவணன் எதற்கும் அசாகாமல் குடும்பத்திற்கு முழு சப்போர்ட்டாக இருக்கிறார். அதிலும் எப்படியாவது சரவணன் சம்பளப் பணத்தை பாதி வாங்கி விட வேண்டும் என்று நினைத்த தங்கமயிலுக்கு ஆப்பு வைக்கும் விதமாக சரவணன் மொத்த பணத்தையும் பாண்டியன் கையில் கொடுத்து விடுகிறார்.

அப்பொழுது கோமதி உனக்கு ஏதாவது செலவு இருக்கிறதா, நீ எடுத்துட்டு குடு என்று சரவணன் இடம் சொல்கிறார். ஆனால் சரவணன் எனக்கு என்ன செலவு இருக்கப் போகிறது. அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை என்று மறுத்து விடுகிறார். இதையெல்லாம் பார்த்த தங்கமயில் புலம்பிக் கொண்டு ரூமுக்குள் போகிறார். பிறகு ரூமுக்குள் வந்த சரவணனிடம் சம்பளம் வந்திருப்பது என்னிடம் சொல்லவில்லை.

பாண்டியன் குடும்பத்திற்கு இடியாக விழப்போகும் பெத்த அடி

அப்படியே போய் உங்க அப்பா கிட்ட கொடுத்துட்டீங்க என்று கேட்கிறார். எப்போதும் போல வழக்கமாக நான் பண்றது தானே. இதை எதுக்கு நான் உன்னிடம் சொல்ல வேண்டும் என்று கேட்கிறார். உடனே தங்கமயில், நான் வந்த பிறகு நீங்கள் முதல்முறையாக வாங்குன சம்பளம் என்னிடம் கொடுத்து இருக்கலாம். இல்லை என்றால் நம் செலவுக்கு எடுத்து வைத்துவிட்டு மீதி பணத்தை கொடுக்கலாம் என கேட்கிறார்.

அதற்கு சரவணன், எப்போதுமே சம்பளப் பணத்தை நான் கொஞ்சம் கூட செலவு பண்ணாமல் அப்படியே அப்பாவிடம் கொடுப்பதுதான் வழக்கம். அப்படி இருந்தால் தான் எனக்கும் திருப்தியாக இருக்கும் என்று சொல்கிறார். உடனே தங்கமயில் இவர் எல்லாம் திருத்தவே முடியாது என்று புலம்பிக் கொண்டு என்னை எங்க அம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க என்று சொல்கிறார்.

உடனே ஏன் என்று கேட்கும் பொழுது நான் அவர்களை பார்க்க வேண்டும். அம்மாவுக்கு மூட்டு வலி என்று பொய்யான காரணத்தை சொல்கிறார். அப்பொழுது பாண்டியனிடமும் சொல்லிவிட்டு சரவணன், தங்கமயிலை கூட்டிட்டு போகிறார். போனதும் அம்மாவை பார்த்து வீட்டில் நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லி புலம்பிக்கொண்டு அழுகிறார். இதற்கு தங்கமயிலின் அம்மா சில சூட்சமங்களை சொல்லி தங்கமயில் மனதை மாற்றுகிறார்.

இதனை அடுத்து குமரவேலு பொண்ணு பாக்குற விஷயத்தில் சக்திவேல், பாண்டியன் குடும்பத்தை அவமானப்படுத்துகிறார். இதை பார்த்து சும்மா இல்லாமல் ராஜி, உங்க மகன் மட்டும் என்ன யோக்கியமா? என்று கேட்கிறார். சரவணன் மாமா கல்யாணம் நடக்கக்கூடாது என்பதற்காக என்னையும் மீனா அக்காவையும் கடத்திட்டு போனவன் தானே என்று சில உண்மைகளை போட்டு உடைக்கிறார்.

இதனால் மாப்பிள்ளை பார்க்க வந்தவர்கள் இந்த குமரவேலு வேண்டாம் என்று போய்விடுகிறார்கள். இதனால் ஒட்டுமொத்த கோபத்தையும் காட்டும் விதமாக பாண்டியனின் மகள் அரிசியை கல்யாணம் பண்ணும் விதமாக குமரவேலு வலுக்கட்டாயமாக தாலி கட்ட போகிறார். ஏற்கனவே பாண்டியன் குடும்பத்திற்கும் சக்திவேல் குடும்பத்திற்கும் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் இந்த ஒரு பிரச்சனையால் பாண்டியன் குடும்பத்திற்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தப் போகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News