கதிரிடம் உண்மையை மறைத்த பாண்டியனின் மருமகள்.. சரவணனை லாக் பண்ணிய மாமியார், எஸ்கேப் ஆகிய தங்கமயில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில், அப்பாவிடம் சபதம் போட்ட வீடியோவை பார்த்த மீனா பூரித்து போய் செந்திலிடம் உணர்வுபூர்வமாக பேசி சந்தோஷப்பட்டு கொள்கிறார். உன் அன்புக்கும் காதலுக்கும் முன்னாடி எனக்கு எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதெல்லாம் பெருசாக என்னை பாதிக்காது. இந்த அன்பு மட்டுமே எனக்கு போதும் என்று மீனா, செந்தில் இடம் உருகி உருகி ரொமான்டிக்காக பேசிக் கொள்கிறார்.

அடுத்ததாக கதிர் மற்றும் ராஜி இருவரும் சேர்ந்து பேசிக் கொள்கிறார்கள். அப்பொழுது கதிர், ராஜியிடம் அனுசரணையாக காலேஜ் பீஸ் எப்பொழுது கெட்ட வேண்டும். சாப்பாடு கரெக்டா கொண்டு போறியா? வேற ஏதாவது செலவு இருக்கா? பணம் ஏதாவது தேவை என்றால் என்னிடம் கேளு. நான் தருகிறேன் என்று ஒரு பொறுப்பான கணவராக ராஜிடம் பேசுகிறார்.

தங்கமயிலை கண்முடித்தனமாக நம்பும் சரவணன்

இதைக் கேட்டதும் ராஜி என்ன செலவானாலும் சம்பளம் வாங்கியதும் நான் பார்த்துக் கொள்வேன் என்று டியூஷன் எடுப்பதை மனதில் நினைத்து சொல்கிறார். இது எதுவும் புரியாத கதிர், என்ன சொல்கிறாய் எனக்கு புரியவில்லை என்று கேட்கிறார். அப்பொழுது இந்த உண்மையை கதிரிடம் மறைப்பதற்காக ராஜி, எனக்கு செலவுக்கு பணம் தேவைப்பட்டால் உன்னிடம் சொல்வேன். நீ சம்பளம் வாங்கி எனக்கு தருவாய், அதை தான் சொல்கிறேன் என்று சமாளித்து விடுகிறார்.

இதனை தொடர்ந்து தங்கமயில் மற்றும் சரவணன் சென்னைக்கு போய் சேர்ந்து ஹோட்டலுக்கு போகிறார்கள். அங்கே போன இடத்தில் சரவணன் ஹோட்டலில் விசாரிக்கிறார். அப்பொழுது அந்த ஹோட்டலில் தங்குவதற்கு மொத்தம் ஹனிமூன் பேக்கேஜ் 26 லட்ச ரூபாய். அதில் நீங்கள் அட்வான்ஸ் ஆக 5 லட்சம் பணத்தை தான் பணத்தை கொடுத்து இருக்கிறீர்கள். மீதம் பணத்தை கொடுங்கள் என்று சொல்கிறார்கள்.

இதை கேட்டு அதிர்ச்சியான சரவணன், தங்கமயிலை வெளியே கூட்டிட்டு வந்து திட்டுகிறார். அப்பொழுது தங்கமயில் எனக்கு இதெல்லாம் தெரியாது. என்று சம்பந்தமே இல்லாத மாதிரி சரவணன் இடம் பேசி நம்ப வைக்கிறார். சரவணனும் சரி அட்வான்ஸ் பணத்தை வாங்கிட்டு வேற ஹோட்டலில் தங்கலாம் என்று உள்ள போய் பணத்தை கேட்கிறார்.

அதற்கு அட்வான்ஸ் பணத்தை திருப்பிக் கொடுக்க மாட்டோம் என்று சொல்கிறார்கள். இதனால் சரவணன் என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பாண்டியன் போன் பண்ணி ஹோட்டல் போய் சேர்ந்துட்டியா? ஹோட்டல் பிடித்திருக்கிறதா, நல்லா இருக்கா என்று கேள்வி கேட்கிறார். அதற்கு நடந்து உண்மையை எதுவும் சொல்லாமல் எல்லாம் நல்லா இருக்கிறது என்று சரவணன் பொய் சொல்கிறார்.

அடுத்து தங்கமயில் அம்மா போன் பண்ணுகிறார். அப்பொழுது சரவணன் இங்கு நடந்த விஷயத்தை சொல்ல வேண்டாம் என்று தங்கமயில் இடம் சொல்லுகிறார். ஆனால் இந்த ஆர்வக்கோளாறு தங்கமயில், பாக்கியத்திடம் எல்லா உண்மையும் சொல்லிவிட்டு புலம்புகிறார். உடனே பாக்கியம் மாப்பிள்ளையிடம் போன் குடு நான் பேசுகிறேன் என்று சொல்கிறார்.

அப்பொழுது சரவணன் இடம் மாமியார் பேசிய நிலையில் என்ன மாப்ள உங்க கையில அந்த அளவுக்கு கூட பணம் இல்லாமல் தான் இருக்கிறீர்களா என்று அவமானப்படுத்தும் அளவிற்கு பேசுகிறார். உடனே பாக்கியம், உங்க அப்பாவுக்கு போன் பண்ணி விபரத்தை சொல்லி பணத்தை கேளுங்கள் என்று சொல்கிறார். ஆனால் சரவணன், பாண்டியனிடம் ஃபோன் பண்ணி கேட்க முடியாததால் கதிருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்கிறார். உடனே கதிரும் நான் பணத்துக்கு ஏற்பாடு பண்ணுகிறேன் என்று அப்பாவின் பணத்தை ஆட்டையப்படுவதற்கு தயாராகி விட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -