கோமதியை டார்ச்சர் பண்ணும் பாண்டியனின் மருமகள்.. தங்கமயிலின் ராஜதந்திரத்தை தவிடு பொடியாக்கிய சரவணன்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் புகுந்த வீட்டுக்கு போய்விட்டால் நெனச்சபடி சந்தோசமாக இருக்கலாம். காசு பணம் நம் கையில் வந்து விடும் என்று கனவு கோட்டையுடன் பாண்டியன் வீட்டிற்குள் பொய் பித்தலாட்டம் பண்ணி புகுந்தார். ஆனால் போன இடத்தில் தங்கமயில் எதிர்பார்த்தபடி வாழ்க்கை அமையாததால் எப்படியாவது கணவனை தன் வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பல சதிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் அம்மாவிடம் புலம்பி விட்டு வீட்டிற்கு வந்த தங்கமயில், சரவணனிடம் நமக்கு தேவையான பணத்தை கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும் என்று பேச்சை ஆரம்பிக்கிறார். ஆனால் சரவணன் ஜாலி மூடில் இருப்பதால் தங்கமயிலை பேசவிடாமல் ரொமான்ஸ் பண்ணுகிறார். ஆனால் இதற்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்கக் கூடாது என்பதற்கு ஏற்ப தங்கமயில் நான் கொஞ்சம் உங்களிடம் சில விஷயங்களை பேச வேண்டும் என்று சொல்கிறார்.

தோல்வியில் முடிந்த தங்கமயிலின் பிளான்

அதற்கு சரவணன், அப்புறமா பேசிக்கலாம் என்று சொல்லிய நிலையில் இல்லை இப்பொழுதே பேச வேண்டும் என்று தங்கமயில் சொல்கிறார். உடனே சரவணன் என்ன என்று கேட்கிறார். அப்பொழுது தங்கமயில் மாமாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று நான் தான் மீனா மற்றும் ராஜியிடம் ஐடியா கொடுத்தேன். அவர்களும் நான் சொன்னதும் சம்மதம் கொடுத்து விட்டார்கள்.

ஆனால் நிகழ்ச்சிக்கு தேவையான எல்லா செலவையும் மீனா ராஜி இருவரும் தான் பார்த்துக் கொண்டார்கள். என்னிடம் பணம் இல்லாததால் என்னால் அவர்களுக்கு கொடுக்க முடியவில்லை. மாமாவும் வெறும் 200 ரூபாய் தான் கொடுத்தாங்க, அதை வச்சு ஒன்னுமே வாங்க முடியவில்லை என்று சொல்கிறார். இதை கேட்ட சரவணன் அதற்கு நான் என்ன பண்ண வேண்டும் என்று கேட்கிறார்.

அப்பொழுது தங்கமயில், இனி நீங்கள் சம்பளம் பணம் வாங்கியதும் எனக்கு பாதி காசு கொடுத்து விடுங்கள். என்னுடைய செலவுக்கு மற்ற எல்லாத்துக்கும் நான் பார்த்துக் கொள்வேன் என்று சொல்கிறார். அதற்கு சரவணன், அப்படி எல்லாம் சம்பளப் பணத்தில் நான் பாதி எடுத்து பழக்கம் இல்லை. அதனால் உனக்கு ஏதாவது செலவு தேவைப்பட்டால் அம்மாவிடம் கேளு என்று சொல்கிறார்.

இதை கேட்டதும் தங்கமயில் எல்லா விஷயத்துக்கும் நான் அவங்க கிட்ட போய் நிற்க முடியாது என்று புலம்புகிறார். உடனே இதற்கு வேறு ஒரு ஐடியா சொல்கிறேன் என்ற சரவணன், மீனா மாதிரி நீயும் ஒரு வேலைக்கு போ. அப்பொழுது உன்னிடம் பணம் இருக்கும், நீயும் தாராளமாக செலவு பண்ணலாம் என்று சொல்கிறார். உடனே தங்கமயில், மாமாக்கு வேலைக்கு போறது பிடிக்காது என்று சொல்கிறார்.

அதற்கு சரவணன், படிச்சுக்கிட்டே இருக்கும் பொழுது வேலை பார்க்க கூடாது என்று தான் அப்பா சொல்லுவாங்க. இப்போ மீனா படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போறாங்க, அதே மாதிரி ராஜியும் படிச்சு முடிச்சிட்டு வேலைக்கு போற. அதனால் நீயும் படிச்சிருக்க ஏதாவது வேலைக்கு போக வேண்டும் என்றால் அப்பா எதுவும் சொல்ல மாட்டாங்க என்று சொல்கிறார்.

அப்பொழுது தங்கமயில், எல்லோரும் வேலைக்கு போய் விட்டால் எல்லா வேலையும் அத்தை ஒருவரால் எப்படி பார்க்க முடியும் அவங்களுக்கு கஷ்டமாக இருக்கும் என்று சொல்கிறார். அதற்கு சரவணன், அம்மா எல்லாத்தையும் சமாளித்துப்பாங்க நீ அதை பற்றி யோசிக்காத நான் வேணா அப்பா கிட்ட பேசி பெர்மிஷன் வாங்கி தரவா என்று கேட்கிறார்.

ஆனால் தங்கமயில் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் எனக்கு வேலைக்கு போக பிடிக்காது. வீட்டில் இருந்து வீட்டு வேலையை பார்க்க வேண்டும் என்று தான் ஆசை என சொல்கிறார். அப்படி என்றால் வீட்டில் இருக்கும் உனக்கு என்ன செலவு இருக்கப் போகிறது என்று சொல்லி சரவணன் தூங்க போய் விடுகிறார். ஆக மொத்தத்தில் தங்கமயில் போட்ட ராஜ தந்திரங்கள் அனைத்தையும் வீணாகப் போய்விட்டது என்பதற்கு ஏற்ப சரவணன் எதற்கும் பிடி கொடுக்காமல் பேசிவிட்டார்.

இதனை அடுத்து ராஜி, கோமதியிடம் டியூஷனுக்கு பெர்மிஷன் கேட்டு மாமாவிடம் பேசிட்டிங்களா என்று கேட்கிறார். அதற்கு கோமதி எனக்கு பயமாக இருக்கிறது நான் பேசமாட்டேன் என்று சொல்லிய நிலையில் ராஜி அடாவடித்தனமாக அப்படி என்றால் நடந்த விஷயத்தை நான் எங்க வீட்டில் சொல்கிறேன் என்று வெளியே போய் சொல்ல கிளம்பி விடுகிறார்.

உடனே பின்னாடியே போய் ராஜியை தடுப்பதற்கு கோமதி, மீனா மற்றும் கதிர் அனைவரும் போகிறார்கள். பின்னாடியே தங்கமயில் என்னவென்று புரியாமல் அவரும் போகிறார். ராஜியை பொருத்தவரை தான் நினைச்சதை சாதிக்க வேண்டும் என்பதற்காக கோமதியை தொடர்ந்து டார்ச்சர் செய்து பாண்டியனிடம் பெர்மிஷன் வாங்க பிளான் பண்ணி விட்டார்.

இதனை தொடர்ந்து ராஜியின் அண்ணன் குமரவேலுவை மாப்பிள்ளை பார்ப்பதற்கு பெண் வீட்டார்கள் வந்து விட்டார்கள். அங்கே பாண்டியனும் வந்த நிலையில் பெண் வீட்டார் குடும்பத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த சக்திவேல் பாண்டியன் குடும்பத்தை அவமானப்படுத்தி திட்டுகிறார். இந்த நேரத்தில் அனைத்து உண்மைகளையும் போட்டு உடைக்கும் விதமாக ராஜி எல்லாத்தையும் சொல்லப் போகிறார். வழக்கம் போல் குமரவேலுக்கு இந்த சம்பந்தமும் நிலைக்காதப்படி போய்விடும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News