Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ஆர்வக்கோளாறு தங்கமயில் தெரிஞ்சு பண்ணுவாங்களா தெரியாம பண்ணுறாங்ககளா தெரியல சில விஷயங்கள் சொதப்பும் அளவிற்கு போய்விடுகிறது. அந்த வகையில் ஹனிமூன் போன இடத்தில் சரவணன் உடன் சந்தோஷமாக இல்லாமல், போட்டோ பைத்தியமாக பல போட்டோக்களை எடுத்து அதை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு அனுப்பி வைத்து ஒரு அல்பதனமாக நடந்து கொள்கிறார்.
அந்த வகையில் சரவணனுடன் நெருங்கி ரொமான்டிக்காக எடுத்த புகைப்படத்தை தெரியாத்தனமாக குடும்பத்தில் இருப்பவர்களுடன் குரூப்பில் போட்டு விடுகிறார். இந்த ஃபோட்டோக்களை பழனிச்சாமி பார்த்து இது என்னடா இந்த மாதிரி பண்ணி வைத்திருக்கிறது என்று செந்தில் மற்றும் கதிரிடம் போட்டோவை காட்டுகிறார்.
கிடைக்கிற கேப்ல மாமனாரை கிண்டல் அடித்த மீனா
இதை பார்த்து செந்தில் மற்றும் கதிர், சரவணன் இதெல்லாம் யோசிக்க மாட்டானா?? போன இடத்தில் தேவை இல்லாமல் ஏன் இந்த மாதிரி பண்ண வேண்டும் என்று பேசிக் கொள்கிறார்கள். அந்த நேரத்தில் பாண்டியனும் வந்து விடுகிறார். அப்பொழுது தங்கமயிலுக்கு ஒரு குட் மார்னிங் மெசேஜ் அனுப்பி விடுவோம் என்று போனை கேட்கிறார்.
ஆனால் பாண்டியன் இந்த போட்டோவை பார்த்து விடக்கூடாது என்று பழனிச்சாமி மற்றும் செந்தில் தடுத்து பார்க்கிறார்கள். அது எதுவும் தெரியாத பாண்டியன் வழக்கம்போல் அந்த போட்டோவை எல்லாம் பார்த்து இது என்னடா அப்படின்னு சொல்லிட்டு வெட்கப்பட்டு விட்டார்.
அதே மாதிரி அந்த போட்டோக்களை அரசி பார்த்துட்டு அடுப்பங்கரையில் வேலை செய்து கொண்டிருக்கும் மீனா ராஜி மற்றும் அம்மாவிடம் காட்டுகிறார். அவர்களும் இதை பார்த்து கிண்டல் அடித்து நக்கல் பண்ணுகிறார்கள். அதோடு விடாமல் மீனா, இந்த போட்டோவை வைத்து நான் கொஞ்சம் செய்ய கூடிய வேலைகள் நிறைய இருக்கு செஞ்சிட்டு வருகிறேன் என்று பாண்டியனை பார்க்கப் போகிறார்.
அப்பொழுது இந்த போட்டோவை பத்தி கேட்டு பாண்டியன், தன் மருமகள் தான் நல்லவள் என்று வாய்க்கு நூறு தடவை சொல்லும் மாமாவிடம் கிண்டல் பண்ணும் அளவிற்கு மீனா வச்சு செய்து விட்டார். இதனை தொடர்ந்து செந்தில் மற்றும் கதிர், சரவணனுக்கு ஃபோன் பண்ணி பேசுகிறார்கள்.
அதற்கு சரவணன், ஏன் யாருமே ஒரு மெசேஜ் கூட பண்ணவில்லை. நீங்க யாரும் பேசவில்லை என்று தங்கமயில் ரொம்பவே ஃபீல் பண்ணுகிறார் என சொல்கிறார். அதற்கு செந்தில், அண்ணி அனுப்பின மெசேஜ் எல்லாம் பதில் யாராலயும் சொல்ல முடியாது என்று சொல்கிறார். ஏன் என்னாச்சு என்று சரவணன் கேட்கும் பொழுது குரூப்ல அனுப்புன 27 போட்டோவை பாரு என்று சொல்கிறார்.
உடனே சரவணன் 27 போட்டோ இல்லையே ஒன்னு தானே அனுப்பி வைத்தோம் என்று சொல்கிறார். அதற்கு செந்தில் முதலில் போய் நீ போனை பாரு என்று சொல்லி போனை கட் பண்ணுகிறார். அப்பொழுது சரவணன் மற்றும் தங்கமயில் போனை பார்க்கும் பொழுது தான் தெரிகிறது எடுத்த அணைத்து போட்டோக்களும் அனுப்பி வைத்திருக்கிறார் என்று. இதை பார்த்ததும் சரவணன் பதட்டம் அடைந்து விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்
- பாண்டியனை ஐஸ் வைக்க தங்கமயில் வாங்கிட்டு போகும் பொருள்
- ஆர்வக்கோளாறால் செந்திலிடம் மாட்டிக்கொண்ட பாண்டியன் மருமகள்
- பொண்டாட்டி மேல் இருக்கும் பாசத்தால் பாண்டியனை வெறுக்கும் மகன்