புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பாண்டியன் நாக்கில் உட்கார்ந்து ஆடும் ஏழரைச்சனி.. முன்னாள் காதலனை பார்த்து ஆத்திரம் அடையும் ராஜி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மீனா ஆசை ஆசையாக செந்திலுக்காக ஒரு டிரஸ் எடுத்துட்டு வந்தார். ஆனால் அதனுடைய விலை அதிகம் என்பதால் பாண்டியன் கொஞ்சம் கூட யோசிக்காமல் மீனா கஷ்டப்படும்படி நோகடித்து பேசி விட்டார். இதனால் சோகமான மீனா ரூம்குள் வந்து அந்த ட்ரெஸ்ஸை பார்த்து பீல் பண்ணுகிறார்.

அப்பொழுது ரூமுக்குள் வந்த செந்தில், மீனாவை ஆறுதல் படுத்தும் விதமாக பேசுகிறார். ஆனால் மீனா எனக்கு மாமா சொன்னது கூட வருத்தமா தெரியல. ஏனென்றால் மாமா இப்படி தான் பேசுவாங்க என்று நான் டிரஸ் எடுக்கும் பொழுதே ஒரு மனநிலைமைக்கு வந்து விட்டேன். ஆனால் மாமா அவ்வளவு தூரம் பேசும் பொழுது எனக்கு சப்போர்ட் பண்ணி கதிர், ராஜி, தங்கமயில் கூட வாயை திறந்து மாமாவிடம் பேசும் பொழுது நீ ஏன் எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு இருந்தாய்.

அதுதான் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது, நீ எனக்காக அந்த இடத்தில் ஒரு சப்போர்ட்டா நின்று பேசி இருந்தால் நான் உண்மையிலே ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன் என்று மீனாவின் ஆதங்கத்தை கொட்டுகிறார். ஆனால் செந்தில், எனக்கு புரிகிறது நான் இத்தனை வருஷங்களாக அப்படியே பழகிட்டேன். திடீரென்று என்னால் அப்படியெல்லாம் பேச முடியாது.

நீ என்னை தப்பா நினைக்காதே என்று சொல்லி மீனாவை சமரசம் செய்து விட்டார். மீனாவும் இது பெரிய விஷயம் இல்லை என்பதற்கு ஏற்ப டேக் இட் ஈஸியாக எடுத்துக் கொண்டார். அடுத்த நாள் செந்திலைக் எக்ஸாம்க்கு டைம் ஆயிருச்சு கிளம்பு என்று சொல்லி அடுப்பங்கரைக்கு வருகிறார். வந்ததும் கோமதி, ராஜி மற்றும் தங்கமயில் அனைவரும் சேர்ந்து செந்திலுக்காக பூஜை பண்ணுகிறார்கள்.

அத்துடன் மாமா பேசுவதை நீ தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என்று கோமதி, மீனாவிடம் பேசி புரிய வைக்கிறார். அப்பொழுது மீனா நான் எதை பற்றி யோசிக்கவில்லை. நான் அதை அப்பொழுதே மறந்து விட்டேன் என்று சொல்கிறார். பிறகு அனைவரும் செந்தில் வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் செந்தில் ஒரு பெரிய ஆபீசர் மாதிரி டிரஸ் பண்ணி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு பெர்ஃபெக்டாக வந்து நிற்கிறார்.

அப்படி செந்தில் வந்ததை பார்த்ததும் மொத்த பேரும் சந்தோஷப்பட்டு விட்டார்கள். பாண்டியனுக்கும் அந்த சந்தோஷம் இருக்கிறது, ஆனால் அதை வெளிக்காட்டாமல் ஒழுங்காக படித்து எழுதினாலே போதும். இதற்கு தேவையில்லாமல் இந்த டிரஸ் தான் போட வேண்டும் என்ற அவசியமும் இல்லை என்று மறுபடியும் நோகடித்து விட்டார்.

பிறகு செந்திலை கூட்டிட்டு மீனா எக்ஸாமுக்கு கிளம்பிவிட்டார். அடுத்ததாக பழனிச்சாமி மற்றும் பாண்டியன் கடைக்கு போகும் பொழுது அங்கே கடையில் உட்கார்ந்து கொண்டிருந்த மீனாவின் அப்பாவை பார்த்ததும் பாண்டியன் பேசப்போகிறார். பாண்டியன் பேச வருகிறார் என்று தெரிந்தது மீனாவின் அப்பா அவரை உதாசீனப்படுத்தி அங்கு இருந்து கிளம்புகிறார்.

உடனே பாண்டியன் என் பையன் அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்து விடுவான். அவன் இன்னைக்கு எக்ஸாம் எழுத போகிறான், நிச்சயம் வேலை கிடைத்துவிடும். அப்பொழுது என் மகள் என் மருமகன் என்று உறவு கொண்டாடி வருவீங்க இது நிச்சயம் நடக்கும் என்று சவால் விட்டு பேசுகிறார். இதைக் கேட்ட மீனாவின் அப்பா, முதல்ல பரிட்சை எழுதிட்டு வரட்டும் அதுக்கப்புறம் பாசாகி வேலையில் சேரும் போது இவ்வளவு தூரம் பேசு என்று நக்கலாக சொல்லிவிட்டு போய்விட்டார்.

ஆனால் இதே பெருமை, இவ்வளவு நம்பிக்கை மகன்கள் மீது இருக்கிறது என்றால் அதை அவர்கள் முன்னாடி காட்டினால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அதை விட்டுவிட்டு அவர்கள் முன்னாடி மட்டம் தட்டி பேசுவதும் வெளி ஆட்களிடம் பெருமையாக பேசுவதையும் பார்க்கும் பொழுது பாண்டியன் நாக்குல ஏழரை சனி உக்காந்து தாண்டவம் ஆடுவது போல் இருக்கிறது. ஆனாலும் பாண்டியன் சொன்னதுக்காகவாவது நிச்சயம் செந்தில் இந்த எக்ஸாமில் பாஸ் பண்ணி மீனாவின் அப்பா முகத்தில் கரியை பூச வேண்டும்.

அடுத்ததாக ராஜி, காலேஜுக்கு போவதற்காக பஸ் ஸ்டாண்டில் இருந்து தோழிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் அங்கே ராஜியை காதலிப்பதாக சொல்லி கல்யாணம் வரை கூட்டிட்டு போய் மொத்த நகையும் பணத்தையும் ஆட்டைய போட்ட முன்னாள் காதலனை எதிர்ச்சியாக பார்க்கிறார். ஏற்கனவே முன்னாள் காதலனை கண்டுபிடித்து அவரிடம் இருக்கும் நகையும் பணத்தையும் திருப்பி வாங்கி விட வேண்டும் என்று ராஜி முயற்சி எடுத்தார்.

ஆனால் அதில் பெயிலியர் ஆகி போனதால் கதிர் அதை விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்த சொன்னார். இப்பொழுது மறுபடியும் ஏமாத்திட்டு போனவனை பார்த்ததும் ராஜி ஆத்திரம் அடையும் அளவிற்கு உச்சகட்ட கோபத்திற்கு போய்விட்டார். அந்த வகையில் இப்பொழுது மறுபடியும் ராஜி கண்ணில் சிக்கி இருக்கிறார். இவர் மூலமாகவது ராஜி அப்பாவிற்கு பழைய உண்மைகள் எல்லாம் தெரிந்தால் கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும்.

- Advertisement -

Trending News