செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

பெத்த மகளை விட மருமகள்கள் ஒசத்தின்னு அவார்ட் கொடுத்த பாண்டியன்.. கோமதி வயிற்றில் புளியை கரைச்ச மீனா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் வீட்டு மூன்று மருமகளுக்கும் நல்லபடியாக தாலி பெருக்கு பங்க்ஷன் முடிந்து விட்டது. ஆனால் இதில் மருமகன் வரவில்லை என்று பாண்டியன் கொஞ்சம் கவலைப்பட்டு பேசுகிறார். இது சம்பந்தமாக குழலியை கூப்பிட்டு என்னாச்சு உன் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. மாப்பிள்ளை கூட வரவில்லை, உனக்கும் அவருக்கும் ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார்.

அதற்கு குழலி, ஓ என்று அழுது புகுந்த வீட்டில் என்னை எல்லோரும் கொடுமை படுத்துகிறார்கள். என் மாமனார் மாமியார் பணம் நகை கேட்டு டார்ச்சர் கொடுக்கிறார்கள் என்று வாய்க்கு வந்தபடி சொல்லி பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்களை நம்ப வைத்து விடுகிறார். உடனே சரவணன், செந்தில், கதிர் அனைவரும் கோபப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று முடிவு எடுத்து விட்டார்கள்.

ஆனால் அதற்கு முன் அந்த வீட்டில் போய் என்ன என்று விசாரித்துவிட்டு வரலாம் என்று செந்தில் சொல்கிறார். அதற்கு கோமதி நீங்க போனா காரியம் கெட்டுப் போய்விடும். அப்பாவே போயிட்டு வரட்டும் என்று சொல்கிறார். உடனே பாண்டியன், பழனிச்சாமி மற்றும் சரவணனை கூட்டிட்டு குழலியின் புகுந்து வீட்டிற்கு போகிறார்கள்.

போனதும் பழனிச்சாமி எங்க வீட்டு பொண்ணுக்கு தேவையான நகை பணத்தை கொடுத்து தானே உங்களுக்கு நல்லபடியாக கல்யாணம் பண்ணி வைத்தோம். ஏன் எல்லோரும் சேர்ந்து அவளை கொடுமைப்படுத்துகிறீர்கள் என்று கேட்கிறார். ஆனால் அதற்கு மாமியார் அழ ஆரம்பித்து விட்டு நாங்கள் யாரும் எதுவும் பண்ணவில்லை. உங்கள் பொண்ணு தான் எங்களை கொடுமை படுத்துகிறார்.

கோவிலுக்கு போயிட்டு வந்து பத்து நிமிஷம் லேட் ஆயிட்டினா கதவை சாத்திவிட்டு, வெளியே நிற்க சொல்லி விடுகிறார். பிள்ளைகளை கூட சரியாக பார்த்துக்க மாட்டிக்கா, மாமனார் வயதானவர் கூட என்று யோசிக்காமல் ஒரு நாளைக்கு சின்ன சின்ன பொருள் வாங்கிட்டு வா என்று 50 தடவை கடைக்கு அனுப்பி வைக்கிறார். தேவையில்லாமல் பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் போட்டு இந்த வீட்டுக்கு ஒரு டெலிவரி பாய் வேலைக்கு வைத்திருக்கிறார்.

சரவணன் தாலி பெருக்கு பங்க்ஷனுக்கு பொருள் வாங்க வேண்டும் என்று எக்கச்சக்கமாக செலவுகளை செய்து இருக்கிறார். ஏன் இவ்வளவு செலவு செய்தாய் என்று சாதாரணமாக கேட்டதற்கு கோவிச்சுட்டு சரவணனை வரச் சொல்லி அங்கே கிளம்பி வந்துட்டாள். போகும் போது கூட என்னை ஃபங்ஷனுக்கு வரக்கூடாது என்று சொல்லி போய்விட்டால் என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் வைக்கிறார்கள்.

இதைக் கேட்டதும் பாண்டியன், சரவணன் மற்றும் பழனிச்சாமி வாய் திறந்து பேச முடியவில்லை. ஆனால் பாண்டியன் கிளம்பும்போது குழலியின் மாமனார் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டு விட்டார். பிறகு வீட்டிற்கு போகும்பொழுது ஒரு கடையில் நிப்பாட்டி பலகாரங்களை வாங்கிகிட்டு வீட்டிற்கு போகிறார். போனதும் குழலி செய்த விஷயங்கள் எதுவும் தெரியாமல் செந்தில் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று சொல்கிறார்.

உடனே பழனிச்சாமி அங்கே நடந்த விஷயத்தையும் குழலி பண்ணிய டார்ச்சர் அனைத்தையும் சொல்லிவிடுகிறார். இதனை கேட்டதும் மீனா நாங்க ஏதாவது இதுல ஒரு விஷயம் பண்ணுனா என்னத்துக்கு ஆயிருக்கும் என்று எதார்த்தமாக சொல்லி கோமதி வயிற்றில் புளியை கரைத்து விட்டார். பிறகு குழலியை திட்டும் விதமாக கோமதி அட்வைஸ் பண்ணுகிறார். ஆனால் காது கொடுத்து கேட்காத குழலி ரூம்குள் போய்விடுகிறார்.

அடுத்ததாக பாண்டியன் வாங்கிட்டு வந்த பலகாரத்தை மருமகளிடம் கொடுத்து சாப்பிடுங்க என அக்கறை காட்டி பேசிவிட்டு போய்விடுகிறார். இதை பார்த்ததும் அரசி, அப்பா எங்களுக்கு எதுவும் வாங்கிட்டு வராம என்ன ஸ்பெஷலா மருமகளுக்கு மட்டும் வாங்கி கொடுக்கிறார் என்று கேட்கிறார். அதற்கு பழனிச்சாமி, பெத்த மகளை விட மருமகள் ரொம்பவே ஒசத்தின்னு அவருக்கு தெரிந்து விட்டது. அதனால் தான் பலகாரம் வாங்கிட்டு வந்தார். அது வெறும் பலகாரம் இல்லை மருமகளுக்கு மாமா கொடுத்த அவார்டு என்று பெருமையாக பேசி விட்டார்.

- Advertisement -

Trending News