Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மீனா மட்டும்தான் கொஞ்சம் துணிச்சலாக இருப்பார் என்று நினைத்து இருந்தால் மீனாவை விட டபுள் மடங்கு தைரியமான மருமகள் என்பதை ராஜி நிரூபித்து காட்டி விட்டார். அந்த வகையில் டியூஷன் எடுப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒவ்வொருவரிடமும் பெர்மிஷன் வாங்கி பாண்டியனையும் சம்மதிக்க வைத்துவிட்டார்.
இதனை தொடர்ந்து தைரியமான மருமகள் மட்டுமல்ல என்னுடைய புகுந்து வீட்டிற்கு என் குடும்பத்தால் இனி எந்த பிரச்சனையும் நடக்காதபடி பார்த்துக் கொள்வேன் என்பதிலும் உறுதியாக இருக்கிறார். அந்த வகையில் ராஜியின் அண்ணன் குமரவேலுவை மாப்பிள்ளை பார்ப்பதற்காக பெண் வீட்டார்கள் வந்திருக்கிறார்கள். அப்படி அவர்கள் வந்த பொழுது பாண்டியன் எதிர்ச்சியாக அவர்களை பார்க்கிறார்.
ராஜி சொன்ன உண்மையால் பாண்டியன் குடும்பத்தில் ஏற்பட போகும் பூகம்பம்
ஏற்கனவே பாண்டியனும் குமரவேலை மாப்பிள்ளை பார்க்க வந்திருக்கும் பெண் வீட்டார்கள் குடும்பத்தார்களும் பழக்கமானவர்கள். அந்த வகையில் பெண் வீட்டார்கள் பாண்டியனை பார்த்ததும் நலம் விசாரித்து பேசிக் கொள்கிறார்கள். அப்பொழுது பாண்டியன் என்ன திடீரென இந்த பக்கம் வந்திருக்கிறீங்க அண்ணா என்று கேட்கிறார். அதற்கு அவர்கள் இங்கே இருக்கும் சக்திவேல் பையனை நாங்கள் மாப்பிள்ளை பார்க்க வந்திருக்கிறோம் என்று சொல்கிறார்.
அந்த நேரத்தில் ராஜியின் குடும்பமும் வெளியே வந்து பெண் வீட்டார்களை வரவேற்பதற்காக நிற்கிறார்கள். உடனே வழக்கம் போல் சக்திவேல், பாண்டியன் குடும்பத்தை அசிங்கப்படுத்தும் விதமாக அவமானப்படுத்தி பேசுகிறார். அத்துடன் ராஜி ஓடிப் போய் கல்யாணம் பண்ணுன விஷயத்தை சொல்லி மறுபடியும் காயப்படுத்தி பேசுகிறார்.
இதனை பார்த்த ராஜி பொங்கி எழு ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் சும்மா என்ன ஓடிப் போனா ஓடிப்போன பொண்ணு சொல்லி குடும்பத்தை அசிங்கப்படுத்தாதீர்ள. நான் ஓடிப்போனது சொல்லி அவமானப்படுத்துகிறீர்களே ஆனால் உங்க பையன் என்ன பண்ணலாம் தெரியுமா? சரவணன் மாமா கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக கல்யாணம் நடக்கும் அந்த நேரத்தில் என்னையும் மீனா அக்காவையும் கல்யாண மண்டபத்தில் இருந்து கடத்திட்டு போனான் என்ற உண்மையை சொல்லி விடுகிறார்.
இதனால் கோபப்பட்ட பாண்டியன் எப்படி எங்க வீட்டு மருமகளை கடத்தி அநியாயம் பண்ணியிருக்கிறாய் என்று சொல்லி குமரவேலுவை அடித்து அசிங்கப்படுத்துகிறார். அத்துடன் கதிர் மற்றும் செந்தில் அனைவரும் கோவப்பட்டு சண்டை போட ஆரம்பித்து விடுகிறார்கள். இப்படி இங்கு நடக்கும் பிரச்சினையை பார்த்ததும் மாப்பிள்ளை பார்க்க வந்த பெண் வீட்டார்கள் இந்த குடும்பத்தின் சகவாசமே வேண்டாம் என சொல்லி போய் விடுகிறார்கள்.
இதனால் குமரவேலு அசிங்கப்பட்டதும் இல்லாமல் நமக்கு கல்யாணம் நடக்கவில்லை என்று ஆதங்கமும் பட ஆரம்பித்து விடுகிறார். உடனே முத்துவேல், உன்மேலும் தவறு இருக்கிறது யாரை கேட்டு நீ அந்த மாதிரியான ஒரு விஷயத்தை செய்தாய் என்று கண்டிக்க ஆரம்பித்து விடுகிறார். இதையெல்லாம் பார்த்த சக்திவேல், குமரவேலை தூண்டி விடும் விதமாக எல்லாத்துக்கும் காரணம் பாண்டியன் தான் என்பதற்கு ஏற்ப கோபத்தை ஏற்றுகிறார்.
உடனே இனிமேல் நமக்கு யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள் கல்யாணமும் நடக்காது என்று புலம்பிய நிலையில், சக்திவேல் மகனுக்கு ஒரு ஐடியா கொடுக்கப் போகிறார். அதாவது பாண்டியன் மகளை நீ கல்யாணம் பண்ணிக்கோ. அதுதான் அந்த குடும்பத்திற்கு நாம் கொடுக்கும் பதிலடியாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். அதன்படி குமரவேலு, இருக்கும் வன்மத்தை கொட்டி தீர்க்கும் விதமாக அரசி கழுத்தில் தாலி கட்டி விடுவார்.