Sports | விளையாட்டு
பாண்டியாவிற்கு பிடித்த நம்ம ஊர் நடிகர் யார் தெரியுமா? தல தளபதி இல்லையாம்! அதுக்கும் மேல
தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை இரண்டு பெரும் தலைகளுக்கு போட்டி என்பது கோலிவுட்டில் இருந்து கொண்டே தான் இருக்கும். சிவாஜி, எம்ஜிஆர் போல கமலஹாசன், ரஜினிகாந்த் இரு ரசிகர்களையும் தாண்டி தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென்று இடம்பிடித்தவர்கள் தளபதி விஜய் மற்றும் அஜீத்.
பிரபல கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா இருவரும் ஐ.பி.எல் தொடரின் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தவர்கள். அதிலும் ரித்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2015ஆம் ஆண்டு 31 பந்துகளில் 61 ரன்கள் குவித்து கொல்கத்தா அணிக்கு எதிராக வெற்றியை பெற்று தந்தவர்.
இதனால் இந்திய அணியில் க்ருனால் பாண்டியாவிற்கு முன்னதாகவே ஹர்திக் பாண்டியா இடம் பிடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. க்ருனால் பாண்டியா சமீபத்தில் அளித்த பேட்டியில் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தென்னிந்திய நடிகர்களில் யார் உங்களுக்கு ரொம்ப பிடித்தவர் என்று கேட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்த க்ருனால் பாண்டியா ‘தலைவர் ரஜினிகாந்த் தான்’ என்று தெரிவித்துள்ளாராம்.
இதுமட்டுமல்லாமல் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான டிஸ்கவரியில் பியர் கிறில்ஸ் நடத்திய “இன்டூ தி வைல்ட்” நிகழ்ச்சி சூப்பர் ஸ்டார் நடித்ததால் உலக அளவில் பிரபலம் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் 1.2 கோடி வருமான பெற்றுள்ளதாக, பத்து மடங்கு பார்வையாளர்கள் அதிகரித்துள்ளதாகவும் டிஸ்கவரி சேனல் தெரிவித்துள்ளது. தலைவர் எங்கே போனாலும் மாஸ் தான்!!
