hardik pandya

தற்பொழுது இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் ஹாட்-டாபிக் யார் என்று பார்த்தால் அது நம்ப ஹர்டிக் பாண்டியா தான்.

பரோடாவிற்கு உள்ளூர் போட்டிகளில் விளையாடி, மும்பை இந்தியன்ஸுக்காக ஐபில் விளையாடி, இந்திய அணியில் இடம் பிடித்தவர் ஹர்டிக் பாண்டியா. பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங் என்று மூன்று துறையிலும் அசத்தி வருகிறார்.டெஸ்ட் மாட்ச், ஒரு நாள் போட்டி, டி20 என்று அணைத்து டீமிலும் இடம் பிடித்துவிட்டார். அடிக்கடி ஹேர் ஸ்டைல் மாற்றுவது, முடிக்கு கலர் அடிப்பது, போட்டோ ஷூட் நடத்துவது இவரின் வாடிக்கை ஆகிவிட்டது.

ட்விட்டரில் சர்ச்சை

கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி, ட்விட்டர் மூலமாக அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக கருத்து ஒன்றை ஹர்டிக் பாண்டியா பதிவிட்டுள்ளார் என ராஷ்ட்ரிய பீம் சேனா உறுப்பினர் டி.ஆர் மெக்வால் என்பவர், ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதிகம் படித்தவை:  கார்த்தியின் தீரன் படத்தை தொடர்ந்து டிரீம் வாரியர்ஸ் வெளியிடும் படம் 'அருவி'. ட்ரைலர் உள்ளே
hardik pandya

அந்த டீவீட்டில் “யார் இந்த அம்பேத்கர்? அரசியலைப்பு சட்டங்களை இயற்றியவரா? அல்லது இடஒதுக்கீடு என்னும் கிருமியை நாடு முழுவதும் பரப்பியவரா?” என ஹர்திக் பாண்ட்யா பதிவிட்டிருக்கிறார். இதையடுத்து, அவரது கருத்திற்கு எதிர்ப்புகள் வந்ததையடுத்து, தனது பதிவை அவர் நீக்கினார்.

இதனை விசாரித்த ஜோத்பூர் நீதிமன்றம், கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாரிடம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த இரு நாட்களாகவே இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

twitter

 

பாண்டியாவின் விளக்கம்

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பாண்டியா விளக்கம் அளித்துள்ளார். ” கடந்த சில நாட்களாகவே ஊடங்கங்களில் நான் திரு அம்பேத்கர் அவர்களை அவமதித்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அது தவறான செய்தி. சர்ச்சைக்குரிய டீவீட்டை பதிவிட்டது என் பெயர் மற்றும் புகைப்படம் உள்ள போலியான கணக்கில் இருந்து.

அதிகம் படித்தவை:  பிரபல காமெடியன், ஹீரோ வாய்ப்பை நிராகரித்தார்

எனக்கு அம்பேத்கர் மீது அதீத மதிப்புள்ளது. அவர் புகழ் கெடும் படியோ, ஒரு சமூகத்தின் மனது புண் படும்படி நான் என்றுமே செயல் பட மாட்டேன். நான் சமூகவலைத்தளத்தை என் ரசிகர்களுடன் பழக்க மட்டுமே பயன்படுத்துகிறேன். தவறான செய்தியை பரப்பாதீர்கள், பொறுப்புணர்ந்து செயல்படுங்கள்.

நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பிப்பேன். என் பெயர் கெடும்படி வேறு யாரோ ஒருவன் தான் இப்படி செய்தது. இது எனக்கு மட்டும் அல்ல இந்தியாவில் பலரும் இப்படி போலி கணக்குகளால் பாதிப்படைந்துள்ளனர்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

Twitter

ஆம் நன்றாக கவனிக்கும் பொழுது பாண்டியாவின் ஐடி @hardikpandya7
என்பதாகும். எனினும் ட்வீட் செய்ததோ @sirhardik3777 என்பதாகும்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்!