செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

கதிரை மருமகனாக ஏற்றுக் கொள்ளப் போகும் பாண்டியனின் சம்மந்தி.. ராஜி அப்பாவுக்கு தெரியவரும் உண்மை

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி காலேஜ்க்கு போகும்பொழுது அங்கே வந்த கண்ணனை பார்த்து விடுகிறார். கண்ணனை பார்த்ததும் எப்படியாவது பணத்தையும் நகையையும் திருப்பி வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால் அதற்குள் ராஜி பார்த்துவிட்டால் என்ற பயத்தில் கண்ணன் அங்கிருந்து ஓடி விடுகிறார்.

இருந்தாலும் ராஜி விடாமல் துரத்திக் கொண்டு ஓடிப்போய் கண்ணனை பிடிக்க முயற்சி எடுக்கிறார். அப்படி போகும் பொழுது கதிரியின் நண்பன் ஒருவர் கதிருக்கு போன் பண்ணி ராஜிக்கு என்ன ஆச்சு. யாரையோ ஒருவரை துரத்திக் கொண்டு வேகமாக போய்க் கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார். உடனே கதிர் அந்த இடத்திற்கு ராஜியை பார்க்க வருகிறார்.

இதற்கிடையில் ராஜிடம் இருந்து கண்ணன் தப்பித்து விட்டார். ஆனால் ஓடிப் போகும் போது ராஜி தவறுகளாக கீழே விழுந்து விடுகிறார். அங்கு இருப்பவர்கள் ராஜிக்கு தண்ணீர் கொடுக்கிறார்கள். உடனே அந்த இடத்திற்கு வந்த கதி,ர் ராஜியை பார்த்து பேசுகிறார். ராஜி என்னுடைய மனைவிதான் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கதிர் சொன்னவுடன் அங்கிருந்தவர்கள் கிளம்பி போய் விடுகிறார்கள்.

பிறகு ராஜியை தனியாக கூட்டிட்டு போன கதிர் என்ன ஆச்சு என்று கேட்கிறார். அதற்கு ராஜி என்னை ஏமாற்றிவிட்டு போன அந்த கண்ணனை நான் பார்த்தேன். அவனை எப்படியாவது பிடித்து என்னிடம் இருந்து திருடிட்டு போன பணத்தையும் நகையையும் வாங்கிவிடலாம் என்று துரத்தினேன். ஆனால் அவன் என்னை பார்த்ததும் பயத்தில் ஓடிப் போய்விட்டான். எப்படியாவது அவனிடம் இருந்து எல்லாத்தையும் வாங்கி விட வேண்டும் என்று சொல்கிறார்.

உடனே கதிர் ஓகே நம் வாங்கிவிடலாம் கொஞ்சம் பொறுமையா இரு என்று சாந்தப்படுத்துகிறார். அப்பொழுது இருவரும் சேர்ந்து காரில் போயி கண்ணனை தேடுகிறார்கள். ஆனால் கண்ணன் அங்கு இல்லை என்று தெரிந்ததும் ராஜி இதை இப்படி சும்மா விட்டுவிடக்கூடாது. போலீஸ் ஸ்டேஷனில் போய் கம்ப்ளைன்ட் கொடுக்கணும் என்று சொல்கிறார். அப்பொழுது கதிர், ஓகே போகலாம். ஆனால் அங்கே நீ எதுவும் பேசாத, நானே எல்லாத்தையும் பேசிக் கொள்கிறேன் என்று சொல்லி கூட்டிட்டு போகிறார்.

பிறகு போலீஸிடம் ராஜு உண்மையை சொல்ல வரும்பொழுது கதிர் அதை தடுத்து விட்டு ராஜி மீது எந்த தவறும் வந்து விடக்கூடாது என்பதற்காக காப்பாற்றி வேற மாதிரி கதையை சொல்லிவிட்டார். பிறகு அங்கிருப்பவர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை பற்றியும் மற்றும் பாண்டியனின் மகன்தான என்ற விவரத்தையும் தெரிந்து கொண்டார்கள். அடுத்ததாக வெளியே வந்த கதிர், ராஜிடம் இனி நாம் தனியாக அந்த கண்ணனை கண்டுபிடிக்கலாம் என்று சொல்கிறார்.

இதுவரை இல்லாமல் தற்போது கண்ணன் கேரக்டரை கொண்டுட்டு வருகிறார்கள் என்றால் அவர் மூலம் நடந்த உண்மை ராஜி அப்பாவுக்கு தெரிய வரப்போகிறது. அந்த சமயத்தில் கதிர் மீது எந்த தவறும் இல்லை நம் குடும்பத்தையும் நம் மகளையும் காப்பாற்றியது கோமதி மற்றும் கதிர்தான் என்று மருமகனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடப் போகிறார். ஆனால் இது எதுவும் தெரியாத சக்திவேலுக்கு பெரிய அதிர்ச்சியாகவும், எதற்காக நம் அண்ணன் ராஜி மற்றும் கதிரை ஏற்றுக்கொண்டார் என புரியாமல் புலம்ப போகிறார்.

- Advertisement -

Trending News