செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

தியேட்டரில் சரவணனிடம் சிக்கிய பாண்டியனின் வாரிசு.. குமரவேலு சதிப்படி கமுக்கமாக நடக்க போகும் கல்யாணம்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன், பிள்ளைகளை நன்றாக வளர்த்திருக்கிறோம் கட்டுக்கோப்பாக இருக்கிறார்கள். சொன்ன பேச்சு கேட்டுக் கொண்டு இருப்பதற்கு நம்முடைய வளர்ப்பு தான் காரணம் என்று கெத்தாக பாண்டியன் இருக்கிறார். ஆனால் இதற்கு ஆப்பு வைக்கும் விதமாக பாண்டியனின் வாரிசு தரமான சம்பவத்தை செய்து விட்டார்.

அதாவது பாண்டியன் வளர்த்த ஆண் பிள்ளைகள் வேண்டுமென்றால் அப்படி இருக்கலாம், ஆனால் அரசி பாண்டியனின் எதிரி மகனாக இருக்கும் குமரவேலுவை காதலித்தது மட்டுமில்லாமல் அவருடன் சேர்ந்து சினிமா பார்ப்பதற்கு தியேட்டர் வரை போய்விட்டார். அங்கே சரவணன் எதிர்ச்சியாக வந்த நிலையில் குமரவேலுடன் நெருங்கி போட்டோ எடுத்து இரண்டு பேரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து விடுகிறார்.

உடனே சரவணன், அரசி என்ன பண்ற இவன் கூட என்று கத்திய நிலையில் குமரவேலு சட்டையை பிடித்து என்ன சொல்லி ஏமாற்றி என் தங்கையை இங்கே கூட்டிட்டு வந்தாய் என்று கோபமாக கொந்தளிக்கிறார். அப்பொழுது குமரவேலு நானும் அரசியும் காதலிக்கிறோம் மச்சான் என்று சொல்கிறார். இதை கேட்டதும் சரவணன் அதிர்ச்சியில் நிற்கிறார்.

ஆனால் இதோடு விடாமல் வீட்டிற்கு வந்து எல்லோரிடமும் சொல்லி விடுவார். அரசின் காதல் பாண்டியன் குடும்பத்தில் இடியாக இருக்கப் போகிறது. அத்துடன் பயத்தில் இருக்கும் அரசி வீட்டிற்கு போக யோசிக்க போகிறார். அப்பொழுது இதுதான் சான்ஸ் என்று குமரவேலு நீ அவங்க வீட்டு பொண்ணா போனா தான் பயம். ஆனால் என்னுடைய மனைவியாகிவிட்டால் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லி அரசி மனசை மாற்றி கல்யாணத்தை கமுக்கமாக பண்ண போகிறார்.

Advertisement Amazon Prime Banner

Trending News