பாண்டியனின் 50வது பிறந்தநாளுக்கு மருமகள்கள் செய்யும் சர்ப்ரைஸ்.. திருந்தாத ராஜி மறுபடியும் எடுக்க போகும் டியூஷன்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி காலேஜுக்கு போவதற்காக பஸ்க்கு காத்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அங்கே சைக்கிளில் வந்த கதிருடன் சேர்ந்து ராஜியை காலேஜுக்கு போக சொல்லி நண்பர்கள் வற்புறுத்துகிறார்கள். ஆனால் கதிர் மற்றும் ராஜி வழக்கம்போல் மோதிக் கொண்டு சண்டை போடுவதால் தனித்தனியாக கல்லூரிக்கு போய் விடுகிறார்கள்.

அடுத்ததாக கோமதி, பாண்டியனுக்கு ஐம்பதாவது பிறந்த நாள் வரப்போகிறது அதற்கு கோவிலில் பூஜை செய்து சிறப்பாக நடத்த வேண்டும் என்று பழனிச்சாமி இடம் சொல்கிறார். அப்பொழுது அங்கே வந்த தங்கமயில், மாமாவின் பிறந்தநாளை ரொம்ப பெருசாக நடத்தலாம் என்று சொல்கிறார். அதற்கு கோமதி அதெல்லாம் வேண்டாம் நாம் அப்படி எதுவும் செய்ய மாட்டோம்.

டியூஷன் எடுப்பதற்கு சம்மதத்தை வாங்க நினைக்கும் ராஜி

எப்பொழுதும் போல கோவிலுக்கு போயிட்டு வந்து பூஜை பண்ணி விதவிதமாக சமைத்து சாப்பிட்டு இருந்தாலே போதும் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் தங்கமயிலுக்கு பாக்கியம் ஃபோன் பண்ணுகிறார். அப்பொழுது நடந்து விஷயத்தை தங்கமயில் அம்மாவிடம் சொல்கிறார். ஆனால் வழக்கம் போல் பாக்கியம் இதற்கு தங்கமயிலை திட்டி நீ ஒன்றும் அந்த குடும்பத்தில் நல்ல பெயர் எடுக்க தேவையில்லை.

எப்படியாவது உன் புருஷனை உன் கைவசம் வைத்துக்கொண்டு உனக்கு தேவையான நகைகளை வாங்கி பணத்தை சேகரித்து தனியாக கூட்டிட்டு வர பாரு என்று தில்லாலங்கடி வேலையை சொல்லிக் கொடுக்கிறார். அதற்கு தங்கமயில், நாம் கவரிங் நகையே போட்டு ஏமாற்றி இருக்கிறோம். நாளைக்கு அந்த விஷயம் தெரிய வந்தால் கூட நான் இப்பொழுது செய்யும் நல்ல விஷயங்களை யோசித்துப் பார்த்து எல்லாரும் என்னை மன்னிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார்.

இதை கேட்டதும் பாக்கியம், நம்ம ஒன்னும் பெருசாக பொய் சொல்லவில்லை. சின்னதா நாலு பொய் சொல்லி இருக்கிறோம். நம்மளை தவிர அந்த குடும்பத்தில் வேறு யாரும் பொண்ணு கொடுக்கவும் தயாராக இல்லை. அதனால் நம்மிடம் தான் அவர்கள் அடங்கிப் போக வேண்டும். இதை மனதில் வைத்து ஒவ்வொரு விஷயத்திலும் காரியமாக இருந்து அந்த குடும்பத்தை கைக்குள் வைத்துக் கொள் என்று தவறான விஷயங்களை தங்கமயில் மனசுக்குள் செலுத்துகிறார்.

அடுத்ததாக மீனா மற்றும் ராஜி இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது மாமா நம்மிடம் இனி கோபப்பட்டு பேசாமல் இருக்க மாட்டாங்க. இன்னைக்கு வந்து நம்மிடம் பேசுவாங்க என்று சொல்கிறார். அப்பொழுது ராஜி நான் டியூஷன் எடுத்த வீட்டிற்கு சென்று அந்த அக்காவை பார்த்து பேசிட்டு வந்தேன் என்று சொல்கிறார். இதை கேட்டதும் மீனா நான் டியூஷன் இனி எடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாயா என்று கேட்கிறார்.

அதற்கு ராஜி, நான் அப்படி எதுவும் சொல்லவில்லை நான் டியூஷன் எடுக்க வருவேன் என்று சொல்லி விட்டு வந்திருக்கிறேன் என்று சொல்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியான மீனா என்ன மறுபடியுமா? என்று ஆச்சரியமாக கேட்கிறார். ஆமாம் அக்கா நான் எடுத்த முயற்சியில் பின் வாங்குவதாக இல்லை. அந்த வகையில் நான் கண்டிப்பாக டியூஷன் எடுப்பது உறுதி தான்.

ஆனால் இந்த முறை பொய் சொல்லிவிட்டு டியூஷன் எடுக்க மாட்டேன். எல்லாரிடமும் சொல்லி மாமாவிடம் சம்மதம் வாங்கிய பின் தான் நான் டியூஷன் எடுப்பேன் என்று நம்பிக்கையுடன் பேசுகிறார். அப்பொழுது அங்கே வந்த தங்கமயில், இன்னும் மாமா உங்களிடம் பேசவில்லை என்று நினைத்து வருத்தப்பட்டு பேசிக்கொள்கிறீர்களா என்று கேட்கிறார்.

அதற்கு மீனா, அப்படி எல்லாம் எதுவும் இல்லை மாமாவுக்கு எங்கள் மீது இருந்த கோபம் போய்விட்டது. இப்பொழுது கடை வேலையை முடித்து விட்டு வரும்போது எனக்கு பிடித்த தின்பண்டங்களை வாங்கிட்டு வந்து கொடுப்பார் பாருங்க என்று நம்பிக்கையுடன் தங்கமயிலுடன் சவால் விடுகிறார். உடனே தங்கமயில் பாப்போம் என்னதான் நடக்கும் என்று சொல்கிறார்.

இதனை அடுத்து மாமாவுக்கு அடுத்த வாரம் ஐம்பதாவது பிறந்த நாள் வருகிறது. நாம் ஏதாவது ஸ்பெஷலாக பண்ணலாமா என்று தங்கமயில் கேட்கிறார். உடனே மீனா மற்றும் ராஜி சரி என்று சொல்லி மூன்று பேரும் சேர்ந்து பாண்டியனின் 50-வது பிறந்தநாளை பெருசாக செய்து நிறைய சர்ப்ரைஸ் பண்ணலாம் என்று முடிவு எடுத்து விட்டார்கள்.

அந்த வகையில் வீட்டுக்கு அலங்காரம் செய்யக்கூடிய பொருட்கள், பாண்டியனுக்கு பிறந்தநாள் டிரஸ் மற்றும் பரிசு என பல பொருட்களை வாங்குவதற்கு மீனா, ராஜி மற்றும் தங்கமயில் கிளம்பி விட்டார்கள். அந்த நேரத்தில் பாண்டியன் வந்த பொழுது மூன்று வரும் சேர்ந்து எங்க போகிறீர்கள் என்று கேட்கிறார்.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாத மீனா முழித்துக் கொண்டிருக்கும் பொழுது ராஜி, தங்கமயில் அக்காவின் அம்மா வீட்டிற்கு நாங்கள் போயிட்டு வருகிறோம் என்று சொல்லி கிளம்புகிறார்கள். இதனை தொடர்ந்து அடுத்து பாண்டியனின் ஐம்பதாவது பிறந்தநாளை குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாட போகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News