திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

மருமகளுக்கு வேலை வாங்கி கொடுத்த பாண்டியன்.. மீனா ராஜ்யிடம் உதவி கேட்கும் தங்கமயில், வெளிவரும் உண்மை

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மாமியார் வீட்டில் இருப்பவர்களை கொடுமைப்படுத்தும் விதமாக குழலி செய்த டார்ச்சர் நினைத்து பாண்டியன் பீல் பண்ணுகிறார். இதைப் பார்த்த கோமதி, தனியாக இருந்து என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க என கேட்கிறார். அதற்கு குழலிக்கு ஓவராக செல்லம் கொடுத்து விட்டோம்.

அதனால் தான் வீட்டில் எப்படி இருந்தாலோ, அதே மாதிரி அங்கேயும் போய் இருக்கணும் என்று புகுந்த வீட்டில் இருந்திருக்கிறார். ஆனால் இதைப் பற்றி ஒரு விஷயம் கூட நம்மிடம் வந்து சொல்லி பிரச்சனை பண்ண வில்லை. குழலி பிள்ளைகளை பார்ப்பதற்கும் பாவமாக இருக்கிறது. அதனால் எப்படியாவது குழலிடம் பேசி கணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பாண்டியன் சொல்கிறார்.

கோமதியும் சரி என்று சொல்லிய நிலையில், திடீரென்று மருமகள் மீது உங்களுக்கு என்ன பாசம் என்று கேட்கிறார். அதற்கு பாண்டியன் எனக்கு எப்பொழுதுமே மருமகள் மீது பாசம் இருக்க தான் செய்யும் என சொல்கிறார். அதற்கு கோமதி திடீரென்று மூன்று பேருக்கும் பிடித்த பலகாரங்களை வாங்கிட்டு வந்து கொடுத்தீர்களா அதனால் கேட்டேன் என்று கேட்கிறார்.

உடனே பாண்டியன், நம்ம வீட்டுக்கு வந்த மருமகள் செய்யும் சின்ன சின்ன தவறுகளுக்கும் நான் அதிக அளவில் திட்டி ரொம்பவே கடுமையாக கண்டித்து இருக்கிறேன். ஆனால் அதைப் பற்றி இன்னும்வரை பெரிசு படுத்தாமல் ஒற்றுமையாக இருப்பது எனக்கு ரொம்பவே பெருமையாக இருக்கிறது என்று சொல்கிறார். கோமதியும் நீங்கள் சொல்வது சரிதான் இனியாவது பிள்ளைகளிடமும் மருமகளிடம் கொஞ்சம் கண்டிப்புடன் பாசத்தையும் காட்டி பேசுங்கள் என சொல்கிறார்.

அடுத்ததாக பாண்டியன், தங்கமயிலை கூப்பிட்டு எனக்கு தெரிந்தவரிடம் பேசி ஒரு டீச்சர் வேலை வாங்கி வைத்திருக்கிறேன். சரவணனை கூட்டிட்டு போய் பார்த்து பேசிட்டு சொல் என்று பாண்டியன் சொல்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியான தங்கமயில் நான் கண்டிப்பா வேலைக்கு போய் தான் ஆகணுமா என்று கேட்கிறார்? அதற்கு கோமதி உனக்கு வேலைக்கு போவதில் என்ன கஷ்டம்.

எனக்கெல்லாம் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை, இல்லையென்றால் நானும் அழகா வேலைக்கு போயிட்டு சந்தோசமாக இருப்பேன் என்று அவருடைய கஷ்டத்தை ஃபீல் பண்ணி பேசுகிறார். பிறகு தங்கமயில் சொல்லியும் கேட்காத பாண்டியன் வேலைக்கு போயிட்டு வா என்று சொல்லிவிடுகிறார். ஆனால் தங்கமயில் படிக்கவே இல்லை. அதனால் இந்த ட்ராக் இப்பொழுது வந்திருப்பதால் நிச்சயம் இந்த ஒரு விஷயமும் மீனா மற்றும் ராஜிக்கு தெரிய வர வாய்ப்பு இருக்கிறது.

அந்த வகையில் இன்னும் என்னெல்லாம் உண்மை மறைத்து வைத்திருக்கிறீர்கள் என்று மீனா மற்றும் ராஜி கேட்க எல்லாத்தையும் தங்கமயில் போட்டு உடைக்க போகிறார். பிறகு இந்த விஷயத்தில் இருந்து தங்கமயிலை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மீனா மற்றும் ராஜி பொய் சொல்லி சமாளிக்க போகிறார்கள்.

- Advertisement -

Trending News