fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

திடீரென்று பாண்டியன் ஸ்டோர்ஸில் மாற்றப்படும் முக்கிய கதாபாத்திரம்.. கதையே இவங்கள வச்சு தானே!

pandian store

Tamil Nadu | தமிழ் நாடு

திடீரென்று பாண்டியன் ஸ்டோர்ஸில் மாற்றப்படும் முக்கிய கதாபாத்திரம்.. கதையே இவங்கள வச்சு தானே!

விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஆனது கூட்டுக் குடும்பத்தை மையப்படுத்தி உருவாகி இருப்பதால், சின்னத்திரை ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ஏனென்றால் இந்த காலத்தில் கூட்டுக்குடும்பம் சாத்தியமா? என பலர் கேள்வி எழுப்பும் நிலையில், அதில் இருக்கும் சந்தோஷம் என்ன என்பதை இந்த சீரியலின் வாயிலாக எடுத்துரைக்கின்றனர்.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலமடைய முக்கிய காரணமாக இருக்கும் முல்லை-கதிர் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஏனென்றால் இவர்களுக்கு இடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சி இயல்பாக காட்டப்படுகிறது. தொடக்கத்தில் முல்லை கதாபாத்திரத்தில் தடித்த விஜே சித்ரா இந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி, சீரியலில் முக்கிய அங்கமாக கருதப்பட்டார்.

அத்துடன் முல்லையை பார்ப்பதற்காகவே இந்த சீரியலை சிலர் பார்க்கத் துவங்கினார். அத்தகைய முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா திடீரென்று தற்கொலை செய்து கொண்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அதன் பிறகு அந்த கதாபாத்திரத்திற்கு காவியா அறிவுமதி மாற்றப்பட்ட தற்போது ரசிகர்களின் மனதில் முழுமையாக பதிந்துள்ளார்.

இருப்பினும் இவரால்விஜே  சித்ரா அளவிற்கு நடிக்கும் முடியாவிட்டாலும் தன்னுடைய நடிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றத்தை ஏற்படுத்தி தற்போது முல்லையாக ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். தற்போது காவியா அறிவுமதி, முல்லை கதாபாத்திரத்தில் இருந்து விலகி வேறொரு நடிகை நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

pandian-stores-serial-cinemapettai87

pandian-stores-serial-cinemapettai

ஏனென்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கஸ்தூரி கதாபாத்திரத்தில் நடிக்கும் கம்பத்து மீனா உடன் முல்லை தோற்றத்தில் இருக்கும் வேறொரு நடிகையுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் சோஷியல் மீடியாவில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அத்துடன் ரசிகர்களும் இனி முல்லையாக இவர் தான் நடிக்கப் போகிறாரா? என்ற கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் தற்போது தான் கதிர்-முல்லை இடையே ரோமன்ஸ் தூக்கலான காட்சிகள் காண்பிக்கப்பட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி கொண்டிருக்கும் நிலையில், திடீரென்று முல்லையின் கதாபாத்திரம் மீண்டும் மாற்றப்படுவது சின்னத்திரை ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Nadu | தமிழ் நாடு

அதிகம் படித்தவை

To Top