ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

6 மாசத்துக்கு இயக்குனருடன் அட்ஜஸ்ட்மென்ட்.. பகிர் கிளப்பிய பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்

Pandian Stores: கடந்த சில வருடங்களாகவே அட்ஜஸ்ட்மென்ட் டீல் என்பது சினிமா துறையில் சகஜமாகிவிட்டது. பட வாய்ப்புகளுக்காக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என இது போன்ற அட்ஜஸ்ட்மெண்ட் டீலில் இறங்கி இருக்கிறார்கள். இந்த பிரச்சனை வெள்ளி திரைக்கு மட்டும் இல்லை, சின்னத்திரையில் இருப்பவர்களுக்கும் தான்.

ஒரு சீரியலில் கேரக்டர் கிடைக்க வேண்டும் என்றாலும், அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி தான் ஆக வேண்டும் என நிறைய நடிகைகள் தங்களுடைய கசப்பான சம்பவங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். விஜய் டிவியின் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்த நடிகை ஒருவரும் அட்ஜஸ்ட்மென்ட் டீலால் பாதிக்கப்பட்டதை வெளியில் சொல்லி இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம், மீனா, முல்லை, ஐஸ்வர்யா என்னும் முக்கியமான கேரக்டர்களில் சுஜிதா, ஹேமா, லாவண்யா, தீபிகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் முல்லை கேரக்டரில் வி ஜே சித்ரா, காவியா என இரண்டு பேர் இதற்கு முன்பு நடித்திருக்கிறார்கள். முல்லை கேரக்டரில் நடித்த நடிகை தான் அட்ஜஸ்ட்மென்ட் டீலில் பாதிக்கப்பட்டது.

Also Read:இந்த வார டிஆர்பி-யில் டாப் 6 இடத்தில் இருக்கும் சீரியல்கள்.. புத்தம் புது சீரியலால் பின்னுக்கு தள்ளப்பட்ட எதிர்நீச்சல்

சித்ராவின் மறைவுக்குப் பிறகு காவியா முல்லை கேரக்டரில் நடித்திருந்தார். பின்பு காவ்யாவுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்ததால் அந்த கேரக்டருக்கு வந்தவர் தான் லாவண்யா. இவர் மாடலிங் துறையிலும், ஷார்ட் பிலிம்களிலும் நடித்தவர். லாவண்யா சினிமாவில் முயற்சித்த போது காஸ்டிங் டைரக்டர் ஒருவர் அவரை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்திருக்கிறார்.

தன்னுடன் ஆறு மாதம் மட்டும் தொடர்பில் இருந்தால் போதும், சினிமாவில் மிகப்பெரிய இடத்தை அடையலாம். இதே போன்று நிறைய பேர் தன்னுடன் தொடர்பில் இருந்ததால் தான் படம், சீரியல் வாய்ப்புகள் என செட்டிலாகி இருக்கிறார்கள். சொந்தமாக கார் கூட வாங்கி இருக்கிறார்கள். அதே போல் நீயும் ஆகலாம் என்று சொல்லி இருக்கிறார்.

லாவண்யா அந்த விஷயத்துக்கு மறுத்த போதிலும் அந்த இயக்குனரை பற்றி வெளியில் சொல்லவில்லையாம். அவரை முறைத்துக் கொண்டு தன்னுடைய பெயரை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை அதனால் தான் அந்த இயக்குனரின் நடவடிக்கையை பற்றி வெளியில் சொல்லவில்லை என சமீபத்திய இன்டர்வியூ ஒன்றில் சொல்லி இருக்கிறார்.

Also Read:பிரதீப்பை ஆட்டம் காண வைக்கும் 2 வைல்டு கார்டு போட்டியாளர்கள்.. சூடு பிடிக்கும் பிக் பாஸ் ஆட்டம்

- Advertisement -spot_img

Trending News