Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சித்ராவுக்கு பதில் இனி இந்த நடிகையா? சத்தியமா செட் ஆகாது என்ற ரசிகர்கள்
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் படத்தின் அப்பட்டமான காப்பியாக இருந்தாலும் தாய்மார்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரசிகர்களை கவர்ந்த ஜோடி என்றால் கதிர் மற்றும் முல்லை ஜோடி தான். முல்லை கதாபாத்திரத்தில் பிரபல vj சித்ரா நடித்திருந்தார். இவர்களுக்காகவே இந்த சீரியல் செம டிஆர்பி பெற்றுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

vj-chithra-cinemapettai
இந்நிலையில் திடீரென சித்ரா சமீபத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி தமிழக ரசிகர்கள் நெஞ்சை உலுக்கியது. மேலும் சித்ராவின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இனி சித்ராவுக்கு பதிலாக ஏற்கனவே ஆயுத எழுத்து சீரியலில் நடித்த சரண்யா திரிவேதி என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். என்னதான் சரண்யா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்தாலும் முல்லை கதாபாத்திரத்திற்கு கொஞ்சமும் செட்டாக மாட்டார் என்றே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

saranya-cinemapettai
மேலும் முல்லை கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்கிற அளவுக்கு பெண் ரசிகைகள் கூறி வருகின்றனர். இதனால் விஜய் டிவியின் டிஆர்பி ஆட்டம் கண்டுள்ளது என்றே சொல்லலாம்.
சமீபத்தில்தான் விஜய் டிவியை சேர்ந்த வடிவேல் பாலாஜி இறந்த நிலையில் தற்போது சித்ராவும் இறந்துள்ளது விஜய் டிவி வட்டாரத்தையே சோகத்திற்கு உள்ளாகியுள்ளது.
