Videos | வீடியோக்கள்
என்னாலதான் சித்ராவுக்கு பிரச்சனை.. கதறிக் கதறி வீடியோ வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா சமீபத்தில் தூக்கு போட்டு இறந்த செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. தற்போது அதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் விஜய் டிவியில் தற்போதைக்கு அதிக டிஆர்பி பெறும் சீரியல். அதற்கு காரணம் தமிழக தாய்மார்கள் மத்தியில் அந்த சீரியல் மிகப் பிரபலமடைந்தது. அதற்கு முக்கிய காரணம் கதிர் மற்றும் முல்லை என்ற கதாபாத்திரங்கள் தான்.
இருவரின் ஜோடியும் தமிழக மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. உண்மையிலேயே அந்த கதாபாத்திரத்தில் நடித்தது என்னமோ சித்ரா மற்றும் குமரன் ஆகியோர் தான். ஆனால் ரசிகர்கள் மத்தியில் அவர்களுக்கு கதிர் மற்றும் முல்லை என்ற பெயர்தான் பிரபலம் ஆகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நட்சத்திரங்கள் சமீபத்தில் சித்ராவின் இறப்பு காரியங்களில் கலந்து கொண்டனர். அப்போது பலரும் சித்ராவை பற்றி நல்ல விதமாக கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மன அழுத்தம் காரணமாகவே சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக அறிக்கை வெளியாகி உள்ளது.
இந்நிலையில் என்னாலதான் சித்ராவுக்கு பிரச்சனை என கதிர் புகழ் குமரன் வீடியோ வெளியிட்டுள்ளது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அந்த வீடியோவில் குமரன், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தவிர வேறு எந்த நிகழ்ச்சியிலும் அதிகம் கலந்து கொள்ளாததால் அந்த சீரியலுக்கு எப்போது கேட்டாலும் கொடுத்து விடுவாராம்.
ஆனால் சித்ரா அந்த சீரியலை தாண்டி டிவி நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் மேலும் பண்டிகைகள் போன்றவற்றில் கலந்து கொள்வது என பிசியாகவே இருப்பாராம். ஒருநாள் விளையாட்டுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங்குக்கு தேதி கொடுத்து விட்டீர்களா என்று சித்ரா கேட்டதற்கு, கொடுத்துவிட்டேன் என்று கூறினாராம் குமரன்.
உங்களால தான் எனக்கு பிரச்சனை எனவும், நீங்கள் தவறாமல் சரியான தேதி கொடுத்துவிடுவதால் தானும் அந்த சூட்டிங்கில் பங்கேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது என ஜாலியாக தெரிவித்தாராம். ஆனால் அவர் ஜாலியாக தெரிவித்தாலும் அதற்கான உள்ளர்த்தம் தற்போதுதான் தனக்குப் புரிகிறது என குமரன் கதறி கதறி அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உண்மையிலேயே பார்ப்பவர்களை கலங்க வைக்கிறது இந்த வீடியோ:-
