சீரியல்களில் நடக்கும் அநியாயங்கள்.. விளாசிய பாண்டியன் ஸ்டார் நடிகை சித்ரா

பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் பிரபலம் அடைந்த சித்ரா. தற்போது சீரியலில் நடக்கும் அநியாயத்தை பற்றி கூறியுள்ளார். இது சீரியலில் புதிதாக வருபவர்களுக்கு கவலையை தருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்’ சின்னத்திரை சீரியலில் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் தொலைக்காட்சிகளிலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் அவர் சீரியலில் நடக்கும் அநியாயத்தை பற்றி கூறியுள்ளார்.

அதாவது பல சீரியல்களில் தமிழ் பெண்களுக்கு வாய்ப்பு தருவதில்லை. ஆனால் கேரளா, கர்நாடகா என வேறு மாநிலத்தைச் சேர்ந்த பெண்களுக்கு தருகின்றனர். காரணம் வேறு மாநில பெண்கள் வெள்ளையாக இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தான் வாய்ப்பு தருவார்கள் என அவர் கூறியுள்ளார்.

நான் ரொம்ப கலர் கிடையாது, dusky கலர்தான் ஆனால் இது ஒரு அழகு தானே, வெள்ளையாக இருக்கும் பெண்களுக்கு ஏன் முக்கியத்துவம் தருகிறார்கள் எனத் தெரியவில்லை என கூறியுள்ளார். மேலும் வெளியில் சொல்ல முடியாத அளவு பல விஷயங்கள் நடக்கும் என்றும் கூறினார். இதற்கு பலரும் அவர் கூறியது சரிதானே என கூறி வருகின்றனர்.

Leave a Comment