புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

செந்திலின் சின்ன சின்ன ஆசைக்கு கூட நோ சொல்லும் பாண்டியன்.. கோபத்தில் மீனா, சமரசம் செய்யும் கதிர்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், செந்தில் எக்ஸாம் எழுத போகிறார் என்கிற விஷயம் பாண்டியனுக்கு தெரிந்து விட்டது. ஆனாலும் செந்தில் எங்க பாஸ் பண்ண போகிறார் என்ற நினைப்பில் பாண்டியன் போய்ட்டு வா என்று பெர்மிஷன் கொடுத்து விடுகிறார். பிறகு மீனாவை ஆபீஸில் விட்டுட்டு செந்தில் கடைக்கு போவதற்கு இருவரும் சேர்ந்து பைக்கில் வருகிறார்கள்.

அப்பொழுது தினமும் நான் ஆபீசுக்கு போயிட்டு வருவதற்கு டூவீலர் இருந்தால் நன்றாக இருக்கும். அதனால் மாமாவிடம் சொல்லி பர்மிஷன் வாங்க வேண்டும் என்று மீனா சொல்கிறார். இதற்கு எதுவும் சொல்லாமல் செந்தில் எதையோ யோசித்துக் கொண்டே வருகிறார். அடுத்ததாக மீனா, மாமா சம்மதிக்க மாட்டார் என்று நினைக்கிறீர்களா? மகனுக்கு தான் மாமா நோ சொல்லுவார், மருமகளுக்கு எல்லாம் ஈசியாக எஸ் சொல்லிவிடுவார் என்று சொல்கிறார்.

எப்படி ராஜி டியூஷன் எடுப்பதற்கு மாமாவிடம் நைசாக பேசி பெர்மிஷன் வாங்கினாலோ, அதே மாதிரி நானும் டூவீலர் வாங்க போவதற்கு மாமாவிடம் பெர்மிஷன் வாங்கி விடுவேன் என்று சொல்கிறார். ஆனால் இவ்வளவு பேசியும் செந்தில் எதுவும் பதில் சொல்லாமல் யோசித்துக் கொண்டே வருகிறார். பிறகு மீனா நான் என்ன சொன்னேன்னு கூட காது கொடுத்து கேட்கவில்லையா என்று கேட்கிறார்.

அதற்கு செந்தில், நாளைக்கு எழுதப் போற எக்ஸாம்காக இரவும் காலையிலேயே எழுந்து படித்ததை கொஞ்சம் நினைவுப்படுத்தி வந்தேன். அதனால் நீ என்ன சொன்னேன்னு கவனிக்கவில்லை என்று சொல்கிறார். இப்படி இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது பாண்டியன், செந்திலுக்கு போன் பண்ணுகிறார். கடைக்கு எவ்வளவு நேரம் ஆகியும் ஏன் இன்னும் வரவில்லை என்று கேட்கிறார்.

உடனே செந்தில், மீனாவை ஆபீஸில் விட்டுட்டு கொஞ்சம் பேசிட்டு இருந்தேன் என்று சொல்கிறார். அதற்கு பாண்டியன் அந்த பிள்ளையிடம் வீட்டில் தான் பேசுகிறாய், இப்பொழுது என்ன பேச்சு வேண்டியது இருக்கு. கடையில் அவ்வளவு வேலை இருக்கிறது சீக்கிரமா வா என்று திட்டி போனை வைக்கிறார். உடனே செந்தில் பயந்து போய் கடைக்கு போய் விடுகிறார்.

இதற்கிடையில் மீனா, எக்ஸாம் எழுத போகும்பொழுது பர்பெக்டா டிரஸ் போட்டு போகணும் என்று சில அறிவுரைகளை கொடுக்கிறார். அதற்காக ஒரு நல்ல டிரஸ் வாங்கிக்கோ என்று சில டிப்ஸ்களை கொடுத்து விடுகிறார். இதனால் ஒரு டிரஸ் வாங்க வேண்டும் என்பதற்காக செந்தில் தயக்கத்துடன் பாண்டியனிடம் பணம் கேட்கிறார்.

உடனே பாண்டியன் உனக்கு எதற்கு பணம் என்று கேட்கும் பொழுது டிரஸ் வாங்க வேண்டும் எக்ஸாம் எழுதுவதற்கு என்று சொல்கிறார். எக்ஸாம் எழுத போவதற்கெல்லாம் புது ட்ரெஸ் போடணும்னு அவசியம் இல்ல. இருக்கிற டிரஸ்ல ஏதாவது ஒன்ன போட்டுட்டு போ என்று சொல்லி செந்திலின் சின்ன ஆசையை கூட நிராகரித்து விடுகிறார். இந்த விஷயம் பழனிச்சாமி மூலம் மீனாவுக்கு தெரிந்து விடுகிறது.

உடனே ஆபீஸ் விட்டு மீனா தனியாக வரும் பொழுது ஒரு டிரஸ் எடுக்க கூட பையனுக்கு உரிமை இல்லையா? அதற்கும் யாராவது நோ சொல்வார்களா என்று பாண்டியன் சொன்னதை நினைத்து புலம்பி இந்த குடும்பத்திற்கு மீனா யாரு என்று தெரியவில்லை. மொத்த பேருக்கும் சேர்ந்து பொங்கல் வைக்க வேண்டும், அப்பொழுது தான் சரிப்பட்டு வருவாங்க என்று புலம்பிக் கொண்டே போகிறார்.

மீனா தனியாக புலம்பி கொண்டு போவதை கதிர் பார்த்து அண்ணி என்று கூப்பிடுகிறார். ஆனால் கதிர் கூப்பிடுவதையும் கண்டுகொள்ளாமல் மீனா யோசித்துக் கொண்டே போகும்போது கதிர் வழிமறித்து என்னாச்சு, கூப்பிட்டது கூட கேட்காமல் போய்விட்டீர்கள் என்று சொல்கிறார். அப்பொழுது மீனா, உனக்கு ஏதாவது வேலை இருக்கிறதா என்று கேட்கிறார்.

அதற்கு கதிர் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை சும்மா பிரண்ட்ஸ் பார்க்கலாம் என்று போறேன் என சொல்கிறார். உடனே மீனா அப்படி என்றால் என்னுடன் வா என்று அண்ணி என்கிற முறையில் அதிகாரம் பண்ணி கதிரை டிரஸ் கடைக்கு கூட்டிட்டு போகிறார். அங்க மொத்த கடையையும் திருப்பி போடும் விதமாக செந்திலுக்கு பார்த்து பார்த்து டிரஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து கதிர் தலையில் கை வைத்து உக்காந்து விட்டார். புது டிரஸ் வாங்கி செந்திலுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து எக்ஸாமுக்கு மீனா கூட்டிட்டு போகப் போகிறார்.

- Advertisement -

Trending News