புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ராஜிக்கு கிரீன் சிக்னல் கொடுத்த பாண்டியன்.. தங்கமயிலுக்கு அடுத்த ஆப்பு ரெடி, சரவணன் வைத்த செக்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் ஸ்ட்ரிக்ட் ஆபீசராக இருந்தாலும் குடும்பத்தில் ஒரு பொறுப்பான தலைவராகவும் எது நல்லது கெட்டது என்று யோசித்துப் பார்த்து அதன்படி செயல்பட்டு வருகிறார். அதனால் தான் அந்த குடும்பம் இப்பொழுது வரை ஒற்றுமையாக இருந்து வருகிறது.

அப்படித்தான் தற்போது பாண்டியன் ஒரு பொறுப்பான குடும்பத் தலைவர் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அதாவது ராஜிக்கு தான் சம்பாதித்து தனக்கான செலவுகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு ஆசை. அதனால் தனக்கு தெரிந்த டியூஷன் விஷயத்துக்கு எப்படியாவது மாமாவிடம் பெர்மிஷன் வாங்க வேண்டும் என்று கோமதியை டார்ச்சர் செய்து பெர்மிஷன் கேட்க வைத்தார்.

ஆனால் அந்த முயற்சி சரியாக எடுபடவில்லை. அதனால் இனி யாரையும் நம்பாமல் நாமளே கழுத்தில் இறங்கலாம் என்று பாண்டியனிடம் கிளியர் கட்டாக பேச துணிந்து விட்டார். அந்த வகையில் பாண்டியனிடம் மாமா நான் டியூஷன் எடுக்கணும் என்று நினைக்கிறேன். நீங்கள் ஒன்றும் அந்த காலத்து ஆட்கள் மாதிரி பெண்கள் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடிய ஆள் இல்லை என்பது எனக்கு தெரியும்.

அதனால் யார் என்ன சொன்னாலும் கவலைப்படாமல் என்னை யோசித்து என்னுடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக எனக்கு டியூஷன் எடுப்பதற்கு பெர்மிஷன் கொடுக்க வேண்டும் என தெள்ளத் தெளிவாக பாண்டியனிடம் கேட்டு விட்டார். இதற்கு பதில் சொல்லாமல் பாண்டியன் கடைக்கு கிளம்பிவிட்டார். பிறகு கடைக்கு போன பாண்டியன், ராஜி சொன்னது சரிதான் என்று யோசித்து வீட்டிற்கு திரும்பிய நிலையில் ராஜியை கூப்பிட்டு மனசுல பட்டதை தெளிவாக சொல்லிவிட்டாய்.

அதனால் நானும் நல்லா யோசித்து ஒரு முடிவு எடுத்து இருக்கிறேன். யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை நீ ஆசைப்பட்ட மாதிரி டியூஷன் எடுப்பதற்கு நான் முழு சம்மதத்தையும் கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி ராஜியின் சந்தோஷத்தை நிறைவேற்றி விட்டார். இதை கேட்ட ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் சந்தோஷம் அடைய ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் இங்குதான் சரவணன் செக் வைக்கப் போகிறார். ஏற்கனவே மீனா வேலை பார்க்கிறார். தற்பொழுது ராஜியும் வேலை பார்த்து அதற்கான செலவுகளை பார்க்க முடிவெடுத்து விட்டார். அதனால் தங்கமயிலிடம் நீயும் டபுள் டிகிரி படித்திருக்கிறாய். அதை வேஸ்ட் பண்ண வேண்டாம் உன் படிப்புக்கு தகுந்த வேலையை தேடி உனக்கான சின்ன சின்ன செலவுகளை பார்க்க முயற்சி எடு என்று தங்கமயிலிடம் சொல்லப் போகிறார்.

இதனால் தங்கமயில் அடுத்து என்ன பண்ணுவது என்று தெரியாமல் மறுபடியும் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டு தவிக்கப் போகிறார். ஆனால் படிப்பும் கிடையாது வேலைக்கும் போக முடியாது என்பதால் என்ன பண்ணுவது எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அடுத்து ஒவ்வொரு நிமிடமும் அல்லல் படப் போகிறார். அந்த வகையில் சரவணனிடம் வீட்டு வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி சமாளித்து வீட்டில் இருக்கும்படி பிளான் பண்ணப் போகிறார்.

- Advertisement -

Trending News