இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர் பஞ்சு அருணாச்சலம். P.A. Arts பேனரில் இவர் நிறைய திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

100 படங்களுக்கு எழுத்தாளராகவும், 200 படங்களுக்கு மேல் பாடலாசிரியராகவும் இருந்துள்ளார். கிட்டதட்ட 80, 90 களில் வெளிவந்த அனைத்து வெற்றிப்படங்களின் கதாசிரியர் திரு. பஞ்சு அருணாச்சலம். மேலும் இசையுலகில் இசைஞானி இளையராஜா வை அறிமுகபடுத்தியவர் என்ற பெருமையை பெற்றவர்.

இவருடைய இந்த திடீர் மரணம் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவரது உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை ஆறு மணி வரை பிரபலங்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருக்கும்.

பஞ்சு அருணாச்சலத்தின் மகன் தற்போது அமெரிக்காவில் இருப்பதால், அவர் வரும் வரை, உடலை மருத்துவமனையில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதனால் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பின்னர் தான் இறுதி சடங்குகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.