பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் ஜுலை 1ம் தேதி கடைசி நாளாகும். அப்படி நீங்கள் இணைக்காவிட்டால் உங்கள் பான்கார்டு செல்லாது என கூறப்படுகிறது.

உங்கள் பான்கார்டு மற்றும் ஆதார் கார்டில் ஒரே மாதிரி பெயர் இருந்தால் மட்டுமே இணைக்க முடியும். பான்கார்டில் திருத்தங்கள் கோரி அதிகளவில் விண்ணப்பங்கள் வருவதால் அதை சரி செய்யும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

பான்கார்டில் ஏதாவது தவறுகள் இருந்தால் திருத்தம் கோரி விண்ணப்பிக்கும் போது தேவையான ஆவணங்களை கண்டிப்பாக ஆன்லைனில் அப்லோடு செய்ய வேண்டும்.

அதே போன்று ஆதார் கார்டில் திருத்தம் இருந்தால் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகி திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

நீங்கள் அவ்வாறு திருத்தங்களை மேற்கொண்டு ஜுன் 30க்குள் இணைக்காவிட்டால் உங்கள் பான்கார்டு செல்லாமல் போகலாம். இதனால் வருமான வரிகணக்கை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தாய்நாடு திருப்பும் வரை இணைக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

நாட்டில் ஒரு சதவதீம் மக்கள் தான் வருமான வரி கட்டுகிறார்கள். எனவே வருமான வரி கட்டுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.