India | இந்தியா
இனி அப்பா பெயர் தேவையா? பான் கார்டின் புது திட்டம்.. எப்படி உடனே பான் எண் வாங்குவது..
மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள என்.எஸ்.டி.எல் அமைப்பு ‘பான் எண்’ சேவையை செய்து வருகிறது. இந்த பான் எண் மூலம் கடன், வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட என அனைத்து நடவடிக்கைகளும் இதன் மூலம் கண்காணிக்கபடும் என கூறியுள்ளனர்.
ஒரு முறை பான் எண் வழங்கப்பட்டால் மீண்டும் அதை மாற்ற இயலாது எனக் கூறியுள்ளனர். இந்தியா முழுவதும் எங்கு சென்றாலும் பான் எண் மாறாது அதை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சூழலில் பான் விண்ணப்பத்தில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி விண்ணப்பிக்கும் நபரின் தந்தையை விட்டு தாய் பிரிந்து விட்டார், தந்தையின் பெயரை குறிப்பிடுவது கட்டாயமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் தொடர்பாக வருமானவரி துறையிலும் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கும் நபர் விரும்பினால் தாயின் பெயரை பதிவிடலாம் என கூறியுள்ளனர். இந்த நடைமுறையானது வரும் டிசம்பர் 5-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

pancard
மேலும் வருமான வரி செலுத்துவதற்காக இணையதளம் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்படுத்திச் செயலி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளார்கள். இதனால் புதிய பான் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அதனை அப்படியே டிராக் செய்யலாம் என்றும் கூறியுள்ளனர்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பித்த சில நிமிடங்களில் நிரந்தர பான் எண் கிடைக்குமாம். சில நாட்களில் அச்சிடப்பட்ட பான் எண் வீட்டிற்கே வருமாம். இதன் பற்றிய செய்திகள் இந்த இணையதளம் https://www.incometaxindia.gov.in மூலம் தெரிந்து கொள்ளலாம். அனைத்து சேவைகளுக்கும் தற்பொழுது பான் எண் இப்போது தேவைபடுகிறது. அதனால் எல்லாரும் வாங்கி கொள்வது நல்லது.
