Connect with us

Cinemapettai

link-Aadhar-card-to-pan-card

India | இந்தியா

எச்சரிக்கை மக்களே! பான் கார்டு, ஆதார் அட்டையில் வரும் மிகபெரிய மாற்றம்.. இனி தப்ப முடியாது

கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி மத்திய அரசு பட்ஜெட் உரையில் பல அதிரடி திட்டங்களை பிறப்பித்தனர். மேலும் சில திட்டங்களில் மாற்றங்களும் செய்துள்ளதாக தெரிவித்தனர். இதனால் இந்திய அரசு பயன் பெறும் எனவும் குறிப்பிட்டார் நிர்மலா சீதாராமன்.

50 ஆயிரத்தை தாண்டி பணம் எடுத்தால் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் பணம் எடுப்பவர்கள் மற்றும் செலுத்துபவர்கள் ஆதார் கார்டு பதிலாக பான் கார்டு கூட பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் பேன் கார்டு தேவைப்படும் இடங்களில் ஆதார் கார்டை பயன்படுத்தி அதன் சேவைகளை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

வங்கியிலிருந்து அதிக பணம் செலுத்துவதாக இருந்தால் பான் கார்டை பயன்படுத்தி கொள்ளலாம் பேன் கார்டு இல்லையென்றால் ஆதார் அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று பான் கார்டு இல்லாதவர்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி வருமான வரியை தாக்கல் செய்து கொள்ளலாம் எனவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

இதே போல் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் அசையா சொத்துக்களை வைத்திருந்தால் பான் எண்ணை குறிப்பிட வேண்டியது கட்டாயம் என தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top