தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணத்தில் உள்ளது ஆஸ்திரேலியா அணி. ஸ்மித் தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். மேலும் ஐசிசி விதிமுறையை மீறி பந்தை சேதப்படுத்திய விவகாரம் பெரும் விவாத களமாகிவிட்டது.மேலும், ‘பேன்கிராஃப்ட்டின் இத்திட்டம் குறித்து தமக்கு முன்பே தெரியும்’ என கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறினார்.

Cameron Bancroft
பின்னர் தலைவர் மற்றும்துணைதலைவர் பதவியில் இருந்து ஸ்மித் மற்றும் வார்னர் விளகினார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்க தலைவர் ஜேம்ஸ் சதர்லாண்ட் ”ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோர் உடனடியாக தென்னாப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்ப உள்ளனர். பந்து சேதப்படுத்துவது குறித்து முன்னரே அவர்களுக்கு தெரியும். மற்ற வீரர்களுக்கு,பயிற்சியாளர்களுக்கு இது பற்றி தெரியவில்லை.

இந்த மூன்று வீரர்களுக்குப் பதிலாக மேத்திவ் ரென்ஷா, ஜோ பர்ன்ஸ் மற்றும் மேக்ஸ்வெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர் டிம் பெயின் கேப்டனாக செயல்படுவார். பயிற்சியாளர் லேமேன் தொடர்ந்து தனது பதவியில் செயல்படுவார். வீரர்கள் தடை தொடர்பாக அடுத்த 24 மணி நேரத்துக்குள் தெரிவிக்கும் நிலையில் இருக்கிறோம்” என்றார்.

இவர்கள் விசாரணையில் இதுவே அதிகார்போரர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியா சென்ற உடன் முழு தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

warner smith

நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்வது என்னவென்றால் வார்னர் தான் பான்கிராப்ட் அவர்களிடம் பந்தை சேதப்படுத்தும் யோசனையை தெரிவித்துள்ளாராம். ஸ்மித்தும் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஓகே சொல்லிவிட்டாராம். எனவே வார்னேருக்கு தான் உச்சக்கட்ட தண்டையான வாழ்நாள் தடை வரும் என்றும் பயிற்சியாளர் லெமன் ஒரு தவறும் செய்யவில்லை என்கிறார்கள்.