அவசரமாக நடக்கும் கல்யாண ஏற்பாடு.. பல்லவியின் சூழ்ச்சிக்கு பலிகடா ஆன பிரியா

Veetuku Veedu Vaasapadi: வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் பிரியாவிடம் காதலை சொல்ல வந்த சரவணன் வசமாக சிக்குகிறார். பல்லவியின் தந்திரத்தால் மாட்டும் பிரியாவுக்கு இப்போது அவசர அவசரமாக கல்யாண ஏற்பாடு செய்கின்றனர்.

தன் மீது கொஞ்சம் கூட சந்தேகம் வராதபடி திட்டம் போட்டு காய் நகர்த்தும் பல்லவி பிரியா மூலம் தன் பழிவாங்கலை தொடர்கிறார். அவருடைய ஏற்பாட்டின் படி போலி ஜாதகம் தயார் செய்யப்பட்டு அர்ஜுன் குடும்பத்தினரிடம் காட்டப்படுகிறது.

அவர்களும் எதுவும் விசாரிக்காமல் பெண்பார்க்கும் படலத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். பிரியா இதில் விருப்பமில்லை என்று கண்ணீர் விட்டு அழுதும் கூட கல்யாண ஏற்பாடுகள் அவசர அவசரமாக நடக்கின்றது.

பல்லவியின் தந்திரம்

இதில் பல்லவியின் சூழ்ச்சியை அர்ஜுன் கண்டுபிடிப்பாரா? பிரியாவின் வாழ்க்கை என்ன ஆகும்? என பல திருப்பங்கள் அடுத்தடுத்த எபிசோடுகளில் அரங்கேற இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் இந்த ப்ரோமோ பல்லவியின் வன்மத்தை காட்டுகிறது.

என்னதான் அர்ஜுன் குடும்பத்தை பழிவாங்க வந்திருந்தாலும் பிரியா வாழ்க்கையை அவர் கெடுப்பது நியாயமே கிடையாது. ஒரு பெண்ணாக இருந்து கொண்டே இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடுகிறார் என அவரை ரசிகர்கள் ரோஸ்ட் செய்து வருகின்றனர்.

ஆனால் எப்படியும் அவருடைய சதி திட்டம் முறியடிக்கப்பட்டுவிடும். இல்லையென்றால் கடைசி நேரத்தில் பிரியா வீட்டை விட்டு ஓடினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எது எப்படியோ பல்லவியின் முகத்திரை கிழியும் நாள் வெகு தூரத்தில் இல்லை என ஆடியன்ஸ் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

புது ட்விஸ்ட் வைக்கும் வீட்டுக்கு வீடு வாசப்படி

Next Story

- Advertisement -