Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பொங்கல் திருவிழாவை வெற்றிகரமாக முடித்துவிட்டு பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் வீட்டிற்கு வந்து விட்டார்கள். வீட்டிற்கு வந்ததும் அதிக சந்தோஷத்தில் இருக்கும் பாண்டியன் கணக்கு பார்க்காமலே செலவுகளை பண்ண ஆரம்பித்து விட்டார். அத்துடன் கோமதி தனக்கு பரிசாக கிடைத்திருக்கும் கிரைண்டர் நினைத்து சந்தோஷப்பட்டு கொள்கிறார்.
ஆனால் அதை பயன்படுத்த மனமில்லாமல் பத்திரமாக பாதுகாத்து பத்தோடு 11 பொருளாக வைத்து விட்டார். இதனை அடுத்து பாண்டியன் வீட்டிற்கு வந்ததும், தரகரிடம் இருந்து பாண்டியனுக்கு போன் வருகிறது. அதாவது பழனிவேலுக்கு நல்ல ஒரு சம்பந்தம் கூடி வந்திருக்கிறது. அந்த வீட்டில் எல்லா விவரத்தையும் சொல்லியாச்சு. மேற்கொண்டு விஷயங்கள் எல்லாம் இன்னைக்கு போய் பேசலாமா என்று கேட்கிறார்.
உடனே பாண்டியனும் சம்மதம் கொடுத்த நிலையில் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்கிறார். அதற்கு பழனிவேலு முகம் வாடி போய் விட்டது. இதனை பார்த்த பாண்டியன், நீ என்ன நம்பி வந்திருக்கிறாய். கண்டிப்பா நல்ல இடத்தில் உனக்கு ஏற்ற பொண்ணை நான் பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பேன். என் மீது நம்பிக்கை இருந்தால் இந்த கல்யாணத்திற்கு சம்மதம் கொடு என்று பாண்டியன் கேட்கிறார்.
அதற்கு பழனிவேலும் தலையாட்டிய நிலையில் பொண்ணு வீட்டுக்கு போய் பேச பாண்டியன் கோமதி செந்தில் மற்றும் மீனா போக தயாராகிட்டார்கள். ஆனால் இந்த நிச்சயதார்த்தம் கல்யாணம் நடக்கும் வரை கொஞ்சம் சைலண்டாக இருக்க வேண்டும். இல்லை என்றால் தேவையில்லாமல் சக்திவேல் மற்றும் முத்துவேல் பிரச்சனை பண்ணுவார்கள் என்பதால் பாண்டியன் கொஞ்சம் அடங்கி விட்டார்.
ஆனாலும் இந்த கல்யாணம் முடியும் வரை ஏகப்பட்ட கலவரங்கள் நடக்கப் போவது உறுதியாகிவிட்டது. கடைசியில் பாண்டியன் பார்த்து வைத்த பெண்ணை பழனிவேலு தாலி கட்ட போவதில்லை. அதற்கு எதிர்மாறாக பழனிவேலு கல்யாணம் எதிர்பார்க்காத படி அரசியுடன் நடக்கப் போகிறது. அதுவரை ஏகப்பட்ட குளறுபடிகளும் குமரவேலு தொடர்ந்து அரசியை பின் தொடர்ந்து வருவார்.