Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பழனிவேலுக்கு அண்ணன்களின் உண்மையான சுயரூபம் தெரிந்துவிட்டது. அதாவது பாண்டியன் பார்த்து வைத்த பொண்ணு வீட்டில் தன்னுடைய இமேஜை டேமேஜ் பண்ணும் அளவிற்கு சதி பண்ணி இருக்கிறார்கள் என்பதால் இனியும் அவர்களை நம்பி அதை வீட்டில் இருக்க முடியாது என்று முடிவெடுத்து விட்டார்.
அதனால் வீட்டிற்கு கோபமாக வந்து பொட்டி படுக்கையை எடுத்துவிட்டு பொண்டாட்டியும் கூட்டிட்டு கிளம்ப தயாராகி விட்டார். இதை பார்த்த பழனிவேலுவின் அண்ணிகள் மற்றும் அம்மா என்னாச்சு ஏன் திடீரென்று கிளம்புகிறாய் என கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அப்பொழுது அங்கே வந்த அண்ணன்கள் மற்றும் குமரவேலுமிடம் இவங்க பண்ணின விஷயம் எல்லாம் உனக்கு தெரியாது.
எதனால பொண்ணு வீட்டில் என்னை வேண்டாம் என்று சொல்லிட்டு போனாங்க என்ற காரணம் தெரியாமல் அனைவரும் குழப்பத்திலேயே இருந்தோம். ஆனால் அதற்கு பின்னணியில் நீ பெத்த பிள்ளைகள் தான் இருக்கிறார்கள் என்பது எனக்கு இப்பதான் புரிந்தது. அதுவும் எப்படி கல்யாணத்தை சொல்லி நிறுத்திருக்கிறார்கள் என்பதை என்னால் வாயால் கூட சொல்ல முடியாது அந்த அளவிற்கு சதி செய்து என்னை அவமானப்படுத்தி இருக்கிறார்கள் என்று கோபமாக கொந்தளித்து விட்டார்.
இதனால் பழனிவேலு கிளம்பும் பொழுது அம்மா மற்றும் அண்ணிகள் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாகி விட்டார்கள். ஆனாலும் சக்திவேல் மற்றும் முத்துவேல் இருவரும் சேர்ந்து பழனிவேலுவை எங்கேயும் போக வேண்டாம் என்று சொல்லி பணத்தாசை காட்டி இருக்க வைத்து விடலாம் என்று நினைத்தார்கள். ஆனாலும் பழனிவேலு, சுகன்யாவை கூட்டிட்டு பாண்டியன் வீட்டு வாசலுக்கு போய் விட்டார்.
அப்பொழுது அங்கே வந்த பாண்டியன் என்னாச்சு ஏன் இங்கே வந்திருக்கிறாய் என்று கேட்கிறார். இதற்கு மேலேயும் நான் அங்கே இருக்க விரும்பவில்லை. ஒரு வார்த்தை என்னை உள்ளே போ என்று சொல்லுங்க மச்சான் என கேட்கிறார். அதற்கு பாண்டியன் இது உன்னுடைய வீடு நீ தாராளமாக போகலாம் என்று சொல்லி விடுகிறார். ஆனால் பழனிவேலு கல்யாணம் பண்ணிட்டு வந்த சுகன்யா ரெட்டை வேஷம் போடும் அளவிற்கு பாண்டியன் வீட்டில் உறவாடி கெடுக்கப் போகிறார்.
ஏற்கனவே பழனிவேலுவுக்கு சேர வேண்டிய சொத்துக்களை கேட்டு அண்ணிகளிடம் விசாரித்து வைத்து விட்டார். அந்த அளவுக்கு கிரிமினலாக இருக்கும் சுகன்யா பாண்டியன் வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் இருப்பவர்களிடம் நல்ல பெயர் எடுக்க டிராமா பண்ணப் போகிறார். அதே நேரத்தில் யாருக்கும் தெரியாமல் பழனிவேலுவை ஆட்டிப்படைக்கும் அளவிற்கு தொந்தரவு செய்யப் போகிறார். பழனிவேலு படும் இம்சையை வெளியே சொல்லவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல் தள்ளாட போகிறார்.
போதாதருக்கு பாண்டியன் குடும்பத்தை ரெண்டா ஆக்கி ஏழரை உண்டாக்கும் அளவிற்கு தொடர்ந்து பிரச்சனை பண்ணுவதற்கு தயாராகிவிட்டார். இந்த சுகன்யா மூலம் தான் அரசி வாழ்க்கை வீணாகப் போகிறது என்பதற்கு ஏற்ப குமரவேலுமிடம் அரிசியை சிக்க வைக்கும் அளவிற்கு கல்யாணத்தை பண்ணி வைக்கப் போகிறார். இனி ஒவ்வொரு நாளும் பாண்டியன் குடும்பம் அவஸ்தையில் தவிக்கப் போகிறது.