Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பையன்களுக்கு கல்யாணம் ஆன மாதிரி பழனிவேலுவுக்கும் கல்யாணம் நடத்தி விட வேண்டும் என்பதில் மும்மரமாக பாண்டியன் இருக்கிறார். அந்த வகையில் இந்த முறை பார்க்கும் இடத்தில் எந்தவித பிரச்சனையும் வந்து விடக்கூடாது. கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக பொண்ணு வீட்டில் எல்லாத்தையும் சொல்லி தெளிவாக பேசிவிட வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார்.
அந்த வகையில் பாண்டியன் கோமதி மீனா செந்தில் மற்றும் பழனிவேலு அனைவரும் சேர்ந்து பொண்ணு வீட்டிற்கு பொண்ணு பார்க்க கிளம்பி விட்டார்கள். அங்கே போனதும் பழனிவேலு என்ன வேலை பார்க்கிறார் எங்கே இருக்கிறார் அவங்க அண்ணன்கள் யார் எப்படிப்பட்டவங்க, அவங்களுக்கும் எங்களுக்கும் ஒத்து வராது. ஏற்கனவே வேறு ஒரு இடத்தில் பொண்ணு பார்த்து நிச்சயதார்த்தம் வரை போனோம்.
ஆனால் அந்த நிச்சயதார்த்தம் நின்றுவிட்டது அதற்கும் காரணம் என்னுடைய இரண்டு மச்சான்கள் தான் என்று எல்லா விஷயத்தையும் தெள்ளத் தெளிவாக பொண்ணு விட்டார்களுக்கு பாண்டியன் கூறுகிறார். இதனை தொடர்ந்து உங்களுக்கு என்ன சந்தேகம் எதுவாக இருந்தாலும் நீங்கள் எங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அத்துடன் எங்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் கிடையாது.
பொண்ணு மற்றும் குடும்பமும் நல்லபடியாக இருந்தால் போதும் என்று தான் நினைக்கிறோம் என பாண்டியன் கூறிவிட்டார். இப்படி பாண்டியன் பேச பேச பொண்ணு வீட்டார்கள் எந்தவித மறுப்பும் இல்லாமல் எல்லாத்துக்கும் ஓகே சொல்லி விடுகிறார்கள். அடுத்தபடியாக பொண்ணை வரச் சொல்லி பழனிவேலுவையும் பொண்ணையும் பார்க்க சொல்கிறார்கள்.
அந்த வகையில் இவர்கள் இரண்டு பேருக்கும் பிடித்து போய்விட்டது. உடனே பாண்டியன் கல்யாண நாளை சீக்கிரத்தில் குறித்து விடுவோம். அத்துடன் கல்யாணத்திற்கு முதல் நாள் நிச்சயதார்த்தத்தை பண்ணிக் கொள்ளலாம் என்று எல்லா விஷயங்களையும் பேசிவிட்டு வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். அப்பொழுது பழனிவேலுவின் பொண்ணு விஷயம் என்னாச்சு என்று கேட்க வேண்டும் என்பதற்காக பழனிவேலுவின் அம்மா வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் மாமியாருக்கு எல்லா தகவலையும் கொடுக்கும் விதமாக பாண்டியன் வாசலில் நின்று விஷயத்தை எல்லாம் சொல்கிறார். அத்துடன் கோமதி, பழனிவேலுக்கு கல்யாணம் நல்லபடியாக நடக்கும் வரை உன்னுடைய இரண்டு பையன்களுக்கும் இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்று அம்மாவுக்கு தகவலை கொடுத்து விடுகிறார். ஆனால் இவர்கள் என்னதான் கல்யாணம் வரை போனாலும் கடைசியில் பழனிவேலு ஏமாற தான் போகிறார்.
ஏனென்றால் இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்பதில் சக்திவேல் மற்றும் முத்துவேல் ரொம்ப மும்பரமாக இருக்கிறார்கள். ஆனாலும் பாண்டியன் எப்படியாவது பழனிவேலுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பதால் அவருடைய மகளையே கடைசி நேரத்தில் கல்யாணம் பண்ணி வைப்பதற்கு முடிவெடுத்து விடுவார்.
இதற்கிடையில் ராஜியை ஒரு போலீஸ் அதிகாரியாக ஆக்கிய தீருவேன் என்று கதிர் தீர்மானமாக இருக்கிறார். அந்த வகையில் எக்ஸாம் சென்னையில் வருகிறது அதற்கு நீ போய் எழுத வேண்டும். எக்ஸாம் எழுதி முடித்துவிட்டு வரும்வரை வீட்டில் இருப்பவர்களிடம் எதுவும் சொல்ல வேண்டாம். ஏதாவது பொய் சொல்லிக்கொண்டு சென்னைக்கு போகலாம் என ராஜிடம் கதிர் கூறுகிறார்.
அதற்கு ராஜி மறுபடியும் பொய் சொல்லிட்டு போனா வீட்டில் தேவையில்லாமல் பிரச்சினை வரும் என்று யோசித்த நிலையில் கதிர் உன்னுடைய குறிக்கோள் போலீஸ் ஆக வேண்டும் என்பது மட்டும்தான். நீ அதை மட்டும் யோசித்து நீ என்ன பண்ணணுமோ பண்ணு, மற்றதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ராஜியை சமாதானப்படுத்தி விட்டார். இதனால் இவர்கள் இருவரும் தனியாக பேசுவதற்கும் பழகுவதற்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கப் போகிறது.