சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி நமக்கு தெரியாத பல ரகசியங்களை பழனிபாபா பல இடங்களில் பல மேடைகளில் குறிப்பிட்டுள்ள வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் காட்டு தீ போல் பரவி கொண்டிருக்கின்றன.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் எவ்வளவு பெரிய நடிகர் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். 40 ஆண்டு காலமாக நம்பர் ஒன் இடத்தில் ஆணி அடித்ததுபோல் அமர்ந்திருக்கிறார். இப்போது வரை அவரை சாய்க்க ஆளில்லை.
அப்படிப்பட்ட ரஜினிகாந்துக்கு பழனிபாபா தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி பான்பராக் பைத்தியம் என சர்டிபிகேட் வாங்கி கொடுத்து ஒரு பெரிய பிரச்சனையில் இருந்து காப்பாற்றி விட்டதாக ஒரு மேடையில் தெரிவித்துள்ளார்.
மக்கள் திலகம் எம் ஜி ஆருக்கு மிகவும் நெருக்கமானவர் பழனிபாபா. இவர் ரஜினிகாந்த் ஒருமுறை ஜேப்பியாரை பிடித்து அடித்ததாகவும், அதன்பிறகு அவர் தன்மீது குற்றம் சுமத்தி தன்னுடைய மனைவி பத்திரிகையை காலி செய்துவிடுவாரோ என அஞ்சினாராம் ரஜினி.
அதனை தொடர்ந்து எம்ஜிஆர் மற்றும் பழனி பாபாவிடம் அடைக்கலம் கேட்க உடனடியாக பழனிபாபா ரஜினிக்கு அளவுக்கதிகமாக பான்பராக் போட்டதால் பைத்தியம் பிடித்து அவரை அடித்ததாக ஒரு சர்டிபிகேட் வாங்கி கொடுத்து அந்த பிரச்சனையிலிருந்து காப்பாற்றி விட்டாராம்.
இன்று கல்வி தந்தையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜேப்பியார் ஒரு காலத்தில் கள்ளச்சாராயம் விற்றார் என்பதே இவர் சொல்லித்தான் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. ரஜினிக்கு ஆரம்ப காலகட்டங்களில் புகை பிடித்தல் மது அருந்துதல் போன்ற பழக்க வழக்கம் அதிகமாக இருந்தது என்பது ரசிகர்களுக்கும் தெரிந்த ஒன்றுதான்.