உலகப் புகழ் பெற்ற மாடல் அழகி பலாக் லால்வாணி தமிழில் அறிமுகமாகிறார்.

மாடல் உலகில் புகழ் பெற்றவர் நடிகை பலாக் லால்வாணி. இவர் மும்பையை சேர்ந்தவர். தற்போது இவர் தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார். இவர் நடித்த முதல் படமான ‘அப்பாயித்தோ அம்மாயி’ படத்தில் ஹீரோவுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

இப்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரை தமிழுக்கு அழைத்து வருகிறார் டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர். அவர் இயக்குனராக அறிமுகமாகும் குப்பத்து ராஜா படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பலாக்கை நடிக்க வைக்கிறார்.

இன்னொரு ஹீரோயினாக பூனம் பாஜ்வா நடிக்கிறார். இது சென்னை குப்பத்தில் வாழும் மனிதர்களை பற்றிய படம். இதில் ஜி.வி.பிரகாஷ்குமார் குப்பத்து இளைஞராகவும், பலாக் லால்வாணி பணக்கார வீட்டு பெண்ணாகவும் நடிக்கிறார். பார்த்திபன் வில்லனாக நடிக்கிறார். இதன் படிப்பிடிப்புகள் தொடங்கி சென்னையில் சைதாப்பேட்டை, கோட்டூர் பகுதிகளில் நடந்து வருகிறது.