உலகமே அதிர்கிறது ஒரு இந்திய சினிமாவால். அதிலும் தென் இந்திய சினிமாவில் இது ஒரு புரட்சி என்கிறார்கள் சினிமா  நோக்கர்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 9 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் வசூலில் எந்த இந்திய படமும் செய்யாத சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

இதுவரை மட்டுமே    ரூ.1,000 கோடி வசூல். இந்த வசூல் இந்த மாத இறுதியில் 3,000 கோடியை எட்டும் என்கிறார்கள்.

இதில் இன்னொரு விஷேசம் என்னவென்றால் தியேட்டர் வசூல் முதல் நாளில் இருந்தது போலவே இருக்கிறது என்கிறார்கள். இன்னும் ஒரு சதவீதம் கூட வசூல் இறங்கவில்லை.

இதன் முதல் பகுதியான பாகுபலி மொத்தமாக ரூ.650 கோடி வசூலித்து இருந்தது. அந்த வசூலை பாகுபலி-2 தாண்டி விட்டது.

உலக அளவில் இதுவரை அவதார், டைட்டானிக், ஹாரிபாட்டர், லார்ட் ஆப் ரிங்க்ஸ் உள்ளிட்ட சில ஹாலிவுட் படங்கள் மட்டுமே ரூ.1,000 கோடி வசூலித்து சாதனைகள் புரிந்தது.

பாகுபலி-2 படத்தை மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் பாராட்டி உள்ளனர்.

மேலும் பிரதமர், இயக்குனர் ராஜமௌலியை விரைவில் சந்தித்து பாராட்டுவார் என்கிற ஒரு செய்தியும் உலாவுகிறது.

ஆஸ்கார் விருது

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாகுபலி-2 படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “பாகுபலி-2 படம் இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளது. இந்த படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்பும்படி மத்திய அரசிடம் சிபாரிசு செய்வேன்.

பாகுபலி-2 படக்குழுவினர் அனைவரையும் தலைநகர் அமராவதிக்கு அழைத்து பாராட்டு விழா நடத்துவேன்” என்றார்.