வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

வீட்டில் தாதா, வெளியில் பிளேபாய்! இதெல்லாம் கோபியால் மட்டும்தான் முடியும்!

விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கதாநாயகியான பாக்கியா குடும்பத் தலைவிகள் ஒரு சிறிய வட்டத்திற்குள் சிக்கிக்கொண்டு படும்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

அதே சமயம் பெண்கள் தங்களுக்கு என்று ஒரு இலக்கை வகுத்து, அதை நோக்கி செல்ல வேண்டும் என்ற உந்துதலையும் இந்த சீரியல் கொடுப்பதால் பலரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு பாராட்டுகளை தெரிவிக்கின்றனர். மேலும் இந்த சீரியலில் பாக்யாவின் கணவர் கோபி தொழிலதிபராக இருப்பதுடன் அவர் தன்னுடைய கல்லூரி தோழி  ராதிகாவுடன் நெருக்கமாக பழகி வருவது இளசுகளுக்கு சவால் விடும் அளவுக்கு காண்பிக்கப்படுகிறது.

ஏனென்றால் இந்த சீரியலில் கோபியின் மூத்த மகன் செழியனுக்கு குழந்தை பிறக்க உள்ளதால் தாத்தா என்ற ஸ்தானத்தை அடையப்போகும் கோபி ப்ளேபாயாக காண்பிக்கப்படுவது இளைஞர்களையே வியக்க வைத்துள்ளது. அத்துடன் கூட்டுக் குடும்பத்தில் வாழும் கோபி பாக்கியாவை உருட்டி மிரட்டி தாதாவாக தன்னுடைய இன்னொரு முகத்தை காண்பிக்கிறார்.

எனவே இந்த சீரியலில் வில்லனாக தற்போது காட்டப்படும் கோபிவுடைய காதல் எப்போது அவருடைய மனைவி பாக்கியாவிற்கு தெரியவரும் என்று ஒவ்வொரு நாளும் ரசிகர்கள் ஆர்வத்துடன் சீரியலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் சீரியலின் இயக்குனரோ பாக்கியலட்சுமி தான் படாத பாடு படுத்திக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆயிரம் பேருக்கு சமைத்து கொடுக்க வேண்டும் என்ற ஆடரை எடுத்து, அதை வெற்றிகரமாக முடித்த பாக்கியலட்சுமி தனக்கு கிடைத்த மூன்று லட்சத்தை பறிகொடுத்து தவித்துக் கொண்டிருக்கும் நிலைமையை தான் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் காண்பிக்கப்படுகிறது.

மேலும் தாத்தா ஆகப் போற வயசுல இதெல்லாம் தேவையா? என்று நெட்டிசன்கள் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தை சமூகவலைதளங்களில் கழுவி ஊற்றுகின்றனர்.

- Advertisement -

Trending News