fbpx
Connect with us

Cinemapettai

கிளாமருக்கு நிக்கி கல்ராணி, குடும்ப நடிப்புக்கு பிந்து மாதவி பட்டையகிளப்பும் விக்ரம் பிரபுவின் பக்கா பட ஆல்பம்.!

News | செய்திகள்

கிளாமருக்கு நிக்கி கல்ராணி, குடும்ப நடிப்புக்கு பிந்து மாதவி பட்டையகிளப்பும் விக்ரம் பிரபுவின் பக்கா பட ஆல்பம்.!

நெருப்புடா படத்துக்குப் பிறகு விக்ரம் பிரபு நடித்துள்ள படம் பக்கா. இதில் நிக்கி கல்ராணி, பிந்துமாதவி என விக்ரம் பிரபுவுக்கு இரண்டு ஜோடிகள்.

pakka

சூரி, சதீஷ் இருவரும் காமெடிக்கு கை கொடுக்கின்றனர். இவர்கள் இருவரும் செய்யும் அலப்பறை ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்குமாம்.

pakka

கிராமியப் பின்னணியைக் கொண்ட இந்தப் படத்தில் ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகின்றனர்.

pakka

இப்படத்துக்கு எஸ்.சரவணன் ஒளிப்பதிவு செய்ய, சி.சத்யா இசையமைக்க, யுக பாரதியும், கபிலனும் பாடல்களை எழுத, அறிமுக இயக்குநர் எஸ்.எஸ்.சூர்யா இயக்குகிறார்.

pakka

இதில் விக்ரம் பிரபு, திருவிழாக்களில் பொம்மை கடை நடத்தும் இளைஞனாகவும், நிக்கி கல்ராணி, ரஜினி ரசிகர் மன்றத் தலைவியாகவும், பிந்து மாதவி, ஊர் தலைவரின் மகளாகவும் நடித்திருக்கிறனர்.

pakka

ஊருக்குள் டோனி பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் விக்ரம் பிரபுக்கும், ரஜினி ரசிகர் மன்றம் வைத்திருக்கும் நிக்கி கல்ராணிக்கும் நடுவே நடக்கும் செல்ல சண்டை சுவாரஸ்யமானவையாம்.

pakka

இவர்களுக்கு இடையே, ஊர் பெரிய மனிதரின் மகள் பிந்து மாதவி வந்து ஆட்டையைக் கலைப்பது கலகலப்பான சம்பவங்களாம்.

pakka

கிளாமருக்கு நிக்கி கல்ராணி, குடும்ப பாங்கான நடிப்புக்கு பிந்து மாதவி என இருவரும் அவரவர் ஏரியாவில் பட்டையைக் கிளப்புகிறார்களாம்.

pakka

பக்கா படத்தின் படப்பிடிப்பு இயற்கை கொஞ்சும் கிராமியப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

pakka

வசனப் பகுதிகள் முழுவதும் படமாக்கப்பட்டுள்ளதால், அடுத்ததாக பாடல் காட்சிகள் படமாக்கப் பட உள்ளது.

pakka

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top