கொடுமைக்காரி மாமியாரிடமிருந்து மகனை காப்பாற்றிய பாக்கியா.. இதுக்கு கோபியை எவ்வளவு பரவால்ல போல!

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்யாவை இதுவரை கோபி டார்ச்சர் செய்து நிம்மதி இல்லாமல் தவிக்க வைத்தார். ஆனால் தற்போது கோபியை விட பாக்கியாவிற்கு தொடர்ந்து குடச்சல் கொடுத்து குடும்பத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக ஈஸ்வரி ஆட்டம் ஆடுகிறார். மாமியார் என்பதால் எதையும் தட்டிக் கேட்க முடியாமல் பாக்கியாவும் வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறார்.

ஆனால் இதை வைத்தே ஈஸ்வரி ஒவ்வொரு நாளும் எழில் மற்றும் அமிர்தாவை நோகடித்து பேசுகிறார். எழில் எந்த வேலையும் பண்ணாமல் ஆசைப்பட்டபடி சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று ஒவ்வொரு இயக்குனர்களையும் பார்த்து வாய்ப்பை கேட்டு வருகிறார். இதனால் துவண்டு போய் இருக்கும் எழிலை, சினிமாவை தூக்கி எறிந்து விட்டு ஒழுங்காக வேலையை பார்த்து வீட்டுக்கு பொறுப்பான பையனாக இருக்க பாரு என்று திட்டினார்.

ஈஸ்வரி கொடுத்த டார்ச்சர், வீட்டை விட்டு போன எழில்

இதனால் சங்கடத்தில் இருந்த எழிலை சமாதானப்படுத்தும் விதமாக பாக்யா நம்பிக்கை கொடுத்து பேசினார். அடுத்ததாக ஜெனி தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிந்ததும் ஈஸ்வரி, அமிர்தாவை திட்டுகிறார். உனக்கு ஒருமுறை சொன்னால் புரியாதா? உனக்கும் எழிலுக்கும் எத்தனை முறை தான் சொல்லுவது. உங்க இரண்டு பேருக்கும் சேர்ந்து ஒரு குழந்தை வேண்டும்.

உங்க இஷ்டப்படி இருக்கிறதா இருந்தா ஏன் இங்கே இருக்க வேண்டும் என்று அமிர்தாவை திட்டி விட்டார். இதனால் மனது உடைந்து போன அமிர்தா நடந்த விஷயத்தை எழில் இடம் சொல்கிறார். அந்த வகையில் பொண்டாட்டிக்காக நியாயம் கேட்கும் விதமாக ஈஸ்வரி பாட்டியிடம் வந்து கேட்கிறார். நீங்கள் குழந்தை விஷயத்தை பற்றி அமிர்தா கிட்ட என்ன சொன்னீங்க என்று கோபமாக கேட்கிறார்.

உடனே ஈஸ்வரி, நான் சொன்னது அதுக்குள்ளயும் உன்கிட்ட வந்து வத்தி வச்சிட்டாளா என்று கேட்கிறார். இவளால் தான் இந்த வீட்டில் எல்லா பிரச்சனையும் வருகிறது. அமிர்தா என்னைக்கு இந்த வீட்டில காலடி எடுத்து வைத்தாலோ, அப்போமே உன் வாழ்க்கை வீணாகி போய்விட்டது என்று ஈஸ்வரி சொல்கிறார். இதைக் கேட்டு கோபப்பட்ட எழில், பாட்டி இதுக்கு மேல ஒரு வார்த்தை கூட அமிர்தாவை பற்றி தப்பா பேசாதீங்க என்று கைநீட்டி கோபமாக திட்டுகிறார்.

அதற்கு ஈஸ்வரி நான் அப்படித்தான் பேசுவேன், நான் பேசுவதை கேட்டு உன்னால இங்க இருக்க முடிஞ்சா இரு. இல்லனா உன் பொண்டாட்டி பிள்ளைகளை கூட்டிட்டு வீட்டை விட்டு வெளியே போய் வாழு. அப்போது தான் அதனுடைய கஷ்டம் என்ன, இவ்வளவு நாள் எப்படி இந்த வீட்டில் சொகுசாக இருந்தோம் என்று உனக்கு புரியும், வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்கிறார்.

இதை கேட்டு அதிர்ச்சியான பாக்யா, மாமியாவை எதிர்த்து பேச முடியாமல் எழிலை நீ இந்த வீட்டை விட்டுப் போ, இதுக்கு மேல நீ இந்த வீட்டில இருக்கக் கூடாது என்று சொல்கிறார். உடனே எழிலும், அமிர்தா நிலா பாப்பாவை கூட்டிட்டு வெளியே போகிறார். இதை தாங்கிக் கொள்ள முடியாத பாக்கியா அடுப்பங்கரையில் இருந்து அழுது தவிக்கிறார்.

ஆனால் பாக்கியா சொன்னதுக்கு காரணம் தினம் தினம் இந்த வீட்டில் இருந்து ஈஸ்வரி திட்டுவதை சகித்துக் கொண்டு வாழ்வதைவிட நீங்கள் தனியாக போய் சந்தோசமான இஷ்டப்பட்ட வாழ்க்கை வாழலாம் என்று சொல்லாமல் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். அதன்படி எழில் நிச்சயம் வெளியில் போய் கஷ்டப்பட்டாலும் கடைசியில் ஜெயித்துக் காட்டிய பின்பு தான் திரும்பவும் இந்த வீட்டுக்கு வருவார்.

ஆனால் இதையெல்லாம் இந்த ஈஸ்வரி கொடுத்த டார்ச்சரால் தான் பிரச்சனை வருகிறது என்பதை பார்க்கும் பொழுது இவரை விட கோபி எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்வதற்கு ஏற்ப இருக்கிறார். ஏனென்றால் கோபிக்கு, பாக்கியா மட்டும் தான் பிடிக்காது. அது தவிர அவர் வேறு யாரையும் கஷ்டப்படுத்தி பேசுவதும் இல்லை, அவமானப்படுத்தி தவிக்க விட்டதும் இல்லை. ஆனால் இந்த ஈஸ்வரி வயசுக்கு ஏத்த மாதிரி நடந்து கொள்ளாமல் வார்த்தையாலே அனைவரையும் நோகடித்து வருகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -