Sports | விளையாட்டு
தன் உண்மையான வயதயை வெளியிட்ட ஷாஹித் அப்ரிடி. 90ஸ் கிட்ஸின் மிகப்பெரிய கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது
தமிழ் சினிமாவில் கமல் ஒரு மார்க்கண்டேயன் என்றால் கிரிக்கெட் உலகில் அப்ரிடி தான் மார்க்கெண்டேயன். பல ஆண்டுகளாக ஸ்பின் பௌலிங் ஆல்ரவுண்டராக கலக்கியவர். சர்வேத கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்று விட்டார். உலகெங்கிலும் உள்ள டி 20 லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றார். பாகிஸ்தானுக்காக 27 டெஸ்ட் (1716 ரன்கள்), 398 ஒரு நாள் போட்டி (8064 ரன்கள்) மற்றும் 99 டி 20 (1461 ரன்கள்) ஆடியவர். அந்த டீம்மின் கேப்டனாகவும் இருந்தவர். தனது ஆரம்ப காலத்தில் துவக்க பேட்ஸமானாக இருந்தவர். பின்னர் லெக் ஸ்பின் வீசும் மத்திய வரிசை பேட்ஸ்மேனாக மாறினார்.
இந்நிலையில் இவர் வாஜித் கான் என்பவருடன் இணைந்து இவர் வாழ்கையை பற்றி GAME CHANGER என்ற புக்கில் எழுதியுள்ளார். சென்ற மதம் இந்த புக் விற்பனைக்கு வந்தது. அதில் தனது வயது பற்றிய சர்ச்சையை சொல்லியுள்ளார்.
Alhamdulillah, #GameChanger is already making waves. But dont go for the media hype! To appreciate what @wajskhan & I have penned in my bio, please READ THE BOOK (yet to get my 1st copy!) If I've been tough on someone, I've given them credit where its due! #TruthFirst #HopeNotOut
— Shahid Afridi (@SAfridiOfficial) May 2, 2019
1996ல் கென்யா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் அப்ரிடி, அதே ஆண்டில் நைரோபியில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 37 பந்தில் அதிவேக சதம் அடித்தார். அந்த சமயத்தில் 16 ஆண்டு 217 நாட்கள் இவர் இதனை செய்ததாக ஐசிசி ரெக்கார்ட்ஸில் உள்ளது. எனினும் தனது புக்கில் அப்பொழுது எனது வயது 19 என தற்பொழுது கூறியுள்ளார். ஆனால் அவரை பார்ப்பதற்கு இளம் வீரர் போல் அல்ல, வயது அதிகமாக இருக்கும் என்று அப்போது விமர்சிக்கப்பட்டது. அவரது வயது குறித்து அவ்வப்போது சர்ச்சைகள் கிளம்புவது வாடிக்கை தான்.
நான் 1975-ம் ஆண்டு பிறந்தேன். அதிகாரிகள் எனது வயதை தவறாக எழுதிவிட்டார்கள்’ என கூறியுள்ளார். மேலும் நான் பிறந்தது 1980-ம் ஆண்டு மார்ச் 1 கிடையாது எனவும் சொல்லியுள்ளார்.
அவர் பிறந்த ஆண்டு 1975 ஆக இருப்பினும், 96 இல் அவர் முதலில் பாகிஸ்தானுக்கு ஆடிய பொழுது அவரது வயது 21 அல்லது 20 ஆக தான் இருந்திருக்க வேண்டும். மேலும் கடந்த 2016 இல் இவர் பாகிஸ்தானுக்கு டி 20 உலகக்கோப்பை ஆடிய பொழுது 36 அல்ல 40 வயதை கடந்து விட்டார். இன்றையதேதியில் 44 அல்லது 45 வயதுடையவர் அப்ரிடி.
