Sports | விளையாட்டு
இந்த மாதிரி ரன் அவுட் பாகிஸ்தான் வீரர்களால் மட்டுமே சாத்தியம்
Published on

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அபு தாபியில் டெஸ்ட் போட்டியில் ஆடி வருகின்றனர். முதல் போட்டியில் உஸ்மான் கவாஜா மற்றும் டிம் பெய்னின் அசத்தலான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி மேட்சை டிரா செய்தது.
இந்நிலையில் ஆரம்பம் முதலே இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது. போட்டியை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு 538 டார்கெட் கொடுத்துள்ளது.
இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்த ரன் அவுட் நிகழ்ந்துள்ளது. பந்தை அடித்துவிட்டு அது பவுண்டரி சென்றுவிட்டது என்று நினைத்த அசார் அலி, பிட்ச் நடுவில் நின்ற படி சபிக்கிடம் பேசிக்கொண்டிருந்தார். ஸ்டார்க் நின்ற பந்தை எடுத்து கீப்பர் பெய்னிடம் வீச, அவர் அசார் அலியை ரன் அவுட் ஆக்கினார்.
