அபிநந்தன் இந்தியாவிடம் நாளை ஒப்படைப்பு.. கடும் நெருக்கடியை சமாளித்தது பாகிஸ்தான்

அபிநந்தன் இந்தியா வருகிறார்

பாகிஸ்தானில் நடந்த போர் விமான சண்டையில் இந்தியாவின் விங் கமாண்டர் அபிநந்தன் விமான தாக்குதலில் பாகிஸ்தானிடம் பிடிபட்டார். இந்த செய்தி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது.

உலக நாடுகளில் பல தலைவர்கள் கண்டனத்துடன் ஐநாவில் கொடுக்கப்பட்ட நெருக்கடியின் காரணமாக அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளை மதியம் வாகா எல்லையில் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கபடுவார் என தெரிகிறது. அபிநந்தன் தமிழகத்தை சேர்ந்தவர். இது சற்று பெருமைப்படுவதாக இருந்தாலும் அவர் உயிருக்கு எந்த பாதிப்பும் வராமல் திரும்ப வரும் வரை சற்று பயத்துடன் நாமும் இருக்க வேண்டியிருக்கிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறுகையில் ‘அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார்’ என கூறும் பொழுது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேஜையை தட்டி  கரகோஷம் எழுப்பினர்.

Leave a Comment