Connect with us
Cinemapettai

Cinemapettai

mohamed-amir

Sports | விளையாட்டு

விரக்தியும், ஏமாற்றமும் 28 வயதில் எடுத்த விபரீத முடிவு.. சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு!

பாகிஸ்தான் அணியில் பல வேகப்பந்து வீச்சாளர்கள் வருவதும் போவதும் சகஜம் தான். அப்படி இருக்கையில் தனக்கென்று ஒரு நீங்கா இடம் பிடித்த அந்த வீரர், பல சாதனைகளை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர். இவர் தனது 17வது வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணியின் நம்பிக்கையைப் பெற்றார்.

2009ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் போட்டியில் அறிமுகமானவர் தொடர்ந்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி பல வீரர்களின் பாராட்டை பெற்றார்.

இதுவரை முகமது அமீர் பாகிஸ்தான் அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் 119 விக்கெட்டுகளையும், 61 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 81 விக்கெட்டுகளையும், 50 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 59 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சூதாட்ட புகாரில் சிக்கி தடை பெற்றவர். இருப்பினும் தடையில் இருந்து மீண்டு வந்த அவர் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார்.

இவர் தற்போது பாகிஸ்தான் அணியின் நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் மேலும் தனக்கு வாய்ப்பு அளித்த சாகித் அப்ரிடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

Amir-Cinemapettai.jpg

Amir-Cinemapettai.jpg

Continue Reading
To Top