Tamil Cinema News | சினிமா செய்திகள்
பையா படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தானாம்.. கிடைத்த வாய்ப்பை இப்படி அநியாயமா விட்டுட்டாரே
2010 லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த பையா திரைப்படம் ரசிகர்கள் மட்டுமில்லாமல் இளசுகளை கவர்ந்த படம் என்றே கூறலாம்.
இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்து இருப்பார். பாடல் வரிகள் அனைத்தும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது, யுவன் சங்கர் ராஜா இசை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றே கூறலாம்.
இந்த படத்தின் கதையை லிங்குசாமி முதல் முறையாக சூர்யாவிடம் கூறினாராம், ஆனால் சூர்யா இந்தப் படம் கார்த்திக் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று தனக்கு வந்த வாய்ப்பை தம்பிக்காக விட்டுக் கொடுத்தாராம்.
அப்படி விட்டுக்கொடுத்து ஹிட்டடித்த படம் தான் பையா. பருத்திவீரன் இல்லாமல் கார்த்திக்கால் இதுபோன்று மாடர்னாக நடித்து கலக்க முடியும் என்பதை தனது முழு நடிப்பால் வெளிப்படுத்தினார்.
சூர்யா மற்றும் கார்த்திக் தமிழ் சினிமாவின் அடையாளம் என்றே கூறலாம். ஏனென்றால் சினிமாவைத் தாண்டி மக்களுக்கு அகரம் பவுண்டேஷன் மூலம் உதவி செய்து வருகின்றன எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல்.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
