சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பத்மாவதி’. ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஷாகித் கபூர் ஆகிய மூவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ராணி பத்மினி வேடத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

padmavati

இசை சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் பின்னணி ஸ்கோர் சஞ்சித் பல்ஹாரா, ஒளிபதிவாளர் சுன்தீப் சட்டர்ஜி, எடிட்டர் ஜெயந்த் ஜாதர்,சஞ்சய் லீலா பன்சாலி, அகிவ் அலி.

padmavati

இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்ரீராஜ்புத் கர்ன சேனை உள்ளிட்ட பல அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் தீபிகா படுகோனே தலையைக் கொண்டு வருபவர்களுக்கு கோடிக்கணக்கில் பரிசுகளும் அறிவிக்கப்பட்டன. தீபிகா தலைக்கு 10 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.

padmavati

இத்தனை பெரும் சர்ச்சைகளுக்கு இடையே வெளியான பத்மாவத் திரைப்படம் வட இந்தியாவில் நடந்த கலவரத்தால் வசூல் பாதிக்கப்பட்டாலும் தென்னிந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த படம்.

Padmavati Ghoomar Song

இந்த படத்தின் இரண்டு நாள் வசூல் தெரியவந்துள்ளது இந்த படம் 53.50 கோடி வரை வசூல் சேர்த்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த வாரத்திற்க்குள் இந்த படம் 100 கோடியை கடக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

padmavati

ஆனால்ஹிந்தியில் இந்த படம் திருட்டு இணையதளத்தில் வெளியாகிவிட்டதால்  இனி வாடா இந்தியாவில் படம் ரிலீஸ் ஆனாலும் வசூல் ஆகாது என தெரிந்த படக்குழு மிக வேதனை அடைந்துள்ளார்.