சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் படம், பத்மாவதி. ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை  சேர்ந்த ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. பத்மாவதியாகத் தீபிகா படுகோனும் ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.

padmavathi

இயக்குனர் பத்மாவதி சரித்திரத்தை தவறாக சித்தரித்து உள்ளார் என்று இந்தப் படம் வெளியாவதைத் தடை செய்ய வேண்டும் என்று ராஜபுத்திரர்களின் அமைப்புகளும், பல வலதுசாரி அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளதுடன் போராட்டமும் நடித்தின. இதனால், திட்டமிட்டபடி, அந்தப் படத்தை டிசம்பர் 1-ஆம் தேதி வெளியிட முடியாமல் போனது.

padmavati

இந்தச் சூழ்நிலையில், பத்மாவதி; திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் அளிப்பது தொடர்பான விவகாரம் சிபிஎஃப்சி வாரிய ஆய்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தணிக்கை வாரிய உறுப்பினர்களும், ஆய்வுக் குழுவினரும் கடந்த 28-ஆம் தேதி கலந்தாலோசித்தனர்.

padmavathi

இறுதியாக சில முடிவுகள் எட்டப்பட்டன. அதுதொடர்பாக மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது…

முதலில் இப்படம் வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்க படவில்லை என்று கிரேடிட்ஸ் போட வேண்டும்.

padmavati

பத்மாவதி என்ற தலைப்பை பத்மாவத் என்று மாற்றியமைக்க வேண்டும். ஏனென்றால் இது கற்பனையில் உருவான பத்மாவத் நூலை அடிப்படையாக கொண்டது தான், உண்மை வரலாறு கிடையாது.

குஹாமார் பாடல் பதிவாகிய முறையில் சில மாறுதல்கள் பண்ண வேண்டும். அது முதன்மை கதாபாத்திரத்தின் புனிதம் கெடும் வகையில் இருக்கக்கூடாது.

தவறான வரலாற்று தளங்களை உபயோகப்படுத்தக்கூடாது. கதைக்களத்தில் வரும் ஊர், இடங்களின் பெயர்கள் மாற்றப்பட வேண்டும்,

மேலும் இந்தப்படம் கணவன் இறந்த பின் மனைவி உடன் கட்டை ஏறுவது சரி என்றோ அல்லது பெருமையான செயல் என்று  படக்குழு நியாப்படுத்தவில்லை என்று படத்தின் எழுத்து போடும் பொழுது disclaimer  அளிக்க வேண்டும்.

padmavati

இந்த நிபந்தனைகளுக்கு படக்குழு ஒப்புக்சொன்னால் யு/ஏ சான்று வழங்குவதாக சென்சார் போர்டு பரிந்துரை செய்துள்ளது. சென்சார் போர்ட்டின் இந்த நிபந்தனைக்கு படக்குழு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் படம் சென்சார் சான்றிதழ் பெற்று, ஜனவரி 18-ம் தேதி ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.