fbpx
Connect with us

Cinemapettai

‘படையப்பா’ நீலாம்பரியாக நடிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட நடிகை! வட போச்சே என இன்றுவரை புலம்பல்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

‘படையப்பா’ நீலாம்பரியாக நடிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட நடிகை! வட போச்சே என இன்றுவரை புலம்பல்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த பெருமைக்குரியவர் நடிகை மீனா.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாகவும், 90களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்தவர்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிகர் திலகம் சிவாஜி நடித்த ‘நெஞ்சங்கள்’ படத்தில் முதல் முதலாக அறிமுகமாகி அதன்பின் கதாநாயகியாக பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தவர் நடிகை மீனா.

அந்த சமயத்தில் இவருக்கு எக்கச்சக்கமான படவாய்ப்புகள் குவிந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘படையப்பா’ படத்தில் பவர்ஃபுல் கேரக்டரான “நீலாம்பரி” கதாபாத்திரத்திற்கு முதல் முதலில் தேர்வு செய்யப்பட்டவர் நடிகை மீனா தான்.

கால்ஷீட் பிரச்சனையால் மீனாவிற்கு அந்தப் பட வாய்ப்பு கை நழுவி சென்றது. நீலாம்பரி கதாபாத்திரத்தை தவறவிட்டதற்கு இன்றுவரை மனம் வருகிறார் நடிகை மீனா.

அதனால்தான் மீனா தற்போது நெகட்டிவ் ரோல் நடிப்பதற்கு ஆசைப்படுவதாக அண்மையில் நேர்காணல் ஒன்றின் மூலம் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கதாநாயகியாகவும் நேர்மறையான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகை மீனா, ரசிகர்களிடம் தனது வித்தியாசமான நடிப்பினை காட்ட நெகட்டிவ் ரோலை தேர்வு செய்துள்ளார்.

இவரது இந்த முடிவிற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் “அண்ணாத்த” இப்படத்தில் கமிட்டாகி இருப்பதால் இந்தப்படத்தில் மீனாவிற்கு நெகட்டிவ் ரோல் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

ரசிகர்களும் மீனாவை வில்லத்தனமாக சினிமாவில் காண்பதற்கு அதிக ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Continue Reading
To Top