Tamil Cinema News | சினிமா செய்திகள்
படையப்பாவில் சௌந்தர்யா வேடத்தில் நடிக்க இருந்தது இவர்தான்.. 20 வருடங்கள் கழித்து வெளியான புகைப்படம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999இல் வெளியான மெகா ஹிட் திரைப்படம் படையப்பா. இதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக மறைந்த முன்னாள் கதாநாயகி சௌந்தர்யா நடித்திருந்தார்.
இந்த படத்தில் மிகவும் புகழ்பெற்ற நீலாம்பரி கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இந்த நீலாம்பரி கேரக்டரின் மூலம் ரம்யா கிருஷ்ணனின் சினிமா வாழ்க்கை உச்சத்திற்கு சென்றது என்றால் மிகையாகாது.
மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகை லட்சுமி மற்றும் சித்ரா போன்ற ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும். மணிவண்ணன் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார்.
நூறு நாட்களுக்கு மேல் ஓடி ரஜினியின் சினிமா வரலாற்றையே மாற்றி எழுதிய படமாக இப்படம் அமைந்தது. ஆனால் இந்த படத்தில் முதன்முதலாக ஹீரோயினாக நடிகை நக்மா கமிட் செய்யப்பட்டு சிறிது நாட்கள் நடித்தார். பிறகு எவ்வித காரணமும் இல்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் நிராகரித்தார்.
அதன் பிறகுதான் அவசரஅவசரமாக சௌந்தர்யாவை புக் பண்ணினார், ரவிக்குமார். அப்பாவி பெண்ணாக சௌந்தர்யா நடிப்பில் அட்டகாசமாக பண்ணியிருப்பார். படையப்பா சூட்டிங் ஸ்பாட்டில் நக்மா, சூப்பர்ஸ்டார் மற்றும் கே. எஸ். ரவிக்குமார் உடன் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது.
இதோ அந்த புகைப்படம்:

padayappa-unseen
