தமிழ் திரைப்படத்துறையில் சூப்பர் ஸ்டார் என்றால் அது நம்ம ரஜினிதான், ரஜினிக்கு மாஸ் படங்கள் ஏராளம் அதில் ஓன்று படையப்பா.ரஜினி நடித்த படையப்பா படம் 1999 ஆம் ஆண்டு வெளிவந்தது.

rajini

அந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, மணிவண்ணன் என பல சினிமா நட்ச்சத்திரங்கள் நடித்திருப்பர்கள். படையப்பா படத்தில் பிரபலமானது என்றால் ஓன்று சூப்பர் ஸ்டார் மற்றொன்று ரம்யா கிருஷ்ணன். ரம்யா கிருஷ்ணன் படையப்பா படத்தில் ரஜினிக்கு இணையாக மாஸாக நடித்திருப்பார் நீலாம்பரி. 

படியப்பா படத்தில் ரஜினியை முதன் முதலில் நீலாம்பரி ஒரு காரில் பார்க்க வருவார். அந்த கார் toyota மாடல் கார் தெரியுமா? மேலும் இந்த காரின் சிறப்பு அம்சம் என்ன தெரியுமா இந்த கார் அதன் டோர் மேலே ஒப்பன் ஆகும்.

ravi

இந்த காரில் உள்ள டோர்க்கு Scissor Door என அழைப்பார்கள்,அந்த கார் யாருடையது தெரியுமா. படையப்பா படத்தை இயக்கிய கே.எஸ் ரவிக்குமாரின் கார் ஆகும் இந்த காரை ரொம்ப நாளாக தனது சென்டிமென்ட் காராக வைத்திருந்தார்.இதனை அப்போது 6 லட்சம் ரூபாய்க்கு வாங்கினார் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்.தற்போது அந்த காரை விற்றுவிட்டு Honda Accord காரை வங்கிவிட்டார் கே.எஸ்.